புதன், 3 ஜனவரி, 2018

வாழ்வாதாரம் பாதிப்பு: மண் பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் கவலை! January 3, 2018

Image

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மண் பானை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.  

ஆத்தூர், துலக்கனூர், நரசிங்கபுரம், தாண்டவராயபுரம், முல்லைவாடி, நாவக்குறிச்சி  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண்பானை தயாரிக்கும் தொழிலில்  100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. 

இந்நிலையில், மண் பாண்டங்கள் செய்ய பயன்படுத்தப்படும் ஏரி மண் தட்டுப்பாடு, விறகு, வைக்கோல் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு போன்றவற்றால் தொழில் நலிவடையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். 

எனவே, மானியத்துடன் கடன் உதவி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்பாண்ட தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.