ராஜஸ்தான், தெலங்கானாவில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுக்கு வந்தது.
சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் 72. 7 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் 67 சதவீத வாக்குகளும் பதிவாகின.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் வரும் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அன்று முற்பகலுக்குள் எந்த கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்பது தெரிந்து விடும். இதற்கிடையே, அதே நாளில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதால் நாடு முழுவதும் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது.
source: NS7.tv