வெள்ளி, 7 டிசம்பர், 2018

கேரள வெள்ள நிவாரணத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு! December 07, 2018


credit: ns7.tv

Image

கேரள வெள்ள நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு மேலும் 3 ஆயிரத்து 48 கோடியே 39 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. 

கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் பெய்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், 14 மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தது. மேலும், 400க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளத்தின் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா, ஆந்திரா, நாகாலாந்து மாநிலங்களின் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து, கேரளாவுக்கு 3 ஆயிரத்து 48 கோடியே 39 லட்சம் ரூபாயும், ஆந்திராவுக்கு 539 கோடியே 52 லட்சம் ரூபாயும் ஒதுக்கப்பட்டது. நாகாலாந்துக்கு 131 கோடியே 16 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.