கரூரில் மாவட்டத்தில் 90 சதவிகிதம் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள 4 பணிமனைகளில், 260 பேருந்துகளும்,100 சதவிகிதம் இயக்கப்படுவதாக, கரூர் மண்டல வணி துணை மேலாளர் ஜூலியஸ் தெரிவித்தார்.
சிஐடியு கரூர் பணிமனைத் தலைவர் பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் மாவட்டத்தில் 90 சதவிகிதத் தொழிலாளர்கள் பணிக்கு செல்லவில்லை என்றும், தற்காலிக பணியாளர்கள், மணல் லாரி ஓட்டுநர்களை பயன்படுத்தி 80 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், இதில் பலர் பேருந்துகளை இயக்குவதற்கு உடல் ரீதியில் தகுதியற்றவர்கள் எனவும் தெரிவித்தார்.