தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்குகிறது.
மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் இத்தேர்வினை எழுதுகின்றனர். இதில் 4 லட்சத்து ஆயிரத்து 101 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 60 ஆயிரத்து 60 பேர் மாணவிகள் ஆவர். இந்த ஆண்டு முதல்முறையாக மொத்த மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டு, ஒரு பாடத்துக்கு அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தேர்வுத்துறை செய்துள்ள நிலையில், முறைகேடுகளை தடுக்க 4000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.
source ns7.tv