சனி, 2 மார்ச், 2019

அபிநந்தன் டைம்லைன்: சிக்கியது முதல் விடுவிக்கப்பட்டது வரை....! March 02, 2019

Authors
Image
பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானப் படை விங் கமாண்டர்  அபிநந்தன் சிக்கியது முதல் விடுவிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள்.
தாயகம் திரும்பிய நாயகன்:
➤27.02.2019: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிய இந்திய விமானம் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து விபத்து.
பகல் 12.30 மணி: இந்திய விமானியை கைது செய்திருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு.
பிற்பகல் 2.45 மணி: அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள வீடியோ வெளியானது.
மாலை  4.45 மணி: பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கண்டிப்பு - அபிநந்தனை விடுவிக்க வலியுறுத்தல்.

➤28.02.2019 
மாலை 4.40 மணி: அபிநந்தன் விடுவிக்கப்படுவார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவிப்பு.
இரவு 7.00 மணி : இம்ரான்கானின் அறிவிப்புக்கு இந்திய விமானப் படை வரவேற்பு.

➤01.03.2019 
காலை 11.20  மணி: அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
மாலை 4.22 மணி: வாகா எல்லைக்கு அபிநந்தனை அழைத்து வந்தது பாகிஸ்தான் ராணுவம்.
மாலை 4.53 மணி: இந்தியாவிடம் ஒப்படைக்கும் முன் அபிநந்தனுக்கு பாக். மருத்துவக் குழு பரிசோதனை.
இரவு 7.40 மணி: ஆவணங்கள் நடைமுறையில் திடீர் சிக்கல் - அபிநந்தனை ஒப்படைப்பதில் தாமதம்.
இரவு 9.17 மணி: இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைப்பு.
source ns7.tv