சனி, 2 மார்ச், 2019

எல்லைப் பதற்றத்தால் மக்களவைத் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? March 02, 2019

Image
எல்லையில் பதற்றமான சூழல் நிலவினாலும் நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். 
நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாரான நிலையில், இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் உருவானது. புல்வாமா தீவிரவாத தாக்குதல், எல்லை தாண்டி பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களில் இந்திய ரணுவம் நடத்திய பதிலடி தாக்குதல், இதை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் என போர் பதற்றம் நிலவியதால் நாடாளுமன்ற தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? எனும் ஐயம் எழுந்தது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, நாடாளுமன்ற தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். 
தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநிலங்களில் செய்யப்பட்டு வரும் தேர்தல் பணிகளை பார்வையிட்டு வருவதாகவும் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
source ns7.tv