சனி, 30 நவம்பர், 2019

உள்ளாச்சி தேர்தல்: அதிமுக குறித்து ஸ்டாலின் குற்றச்சாட்டு..!

credit ns7.tv தொகுதி மறுவரையறை செய்யப்படாமல் அதிமுக அரசு தேர்தலை நடத்தினாலும் திமுக சந்திக்க தயாராக உள்ளது என அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. இதனை அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அதுகுறித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், விளக்கம் அளித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில்...

நித்தியானந்தா மீது கொலை புகார்!

நித்தியானந்தா மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரது ஆசிரமத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த திருச்சி பெண்ணின் சாவில் மர்மம் நீடிப்பதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.  திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுணன்-ஜான்சிராணி தம்பதியின் 3வது மகள் சங்கீதா. இவர் தனது சித்தியுடன் சேலத்தில் உள்ள நித்தியானந்தாவிற்கு...

மகாராஷ்டிராவில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், உத்தவ் தாக்ரே அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது.  அந்த மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா பிடிவாதம் பிடித்ததால், பாஜக கூட்டணி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கவிருந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற...

கோட்சே குறித்த சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கோரினார் பிரக்யா தாக்கூர்!

credit ns7.tv காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை தேசபக்தர் என கூறியதற்காக பாரதிய ஜனதா எம்பி பிரக்யா சிங் தாக்கூர் நாடாளுமன்றத்திலேயே மன்னிப்பு கோரினார்.  மக்களவையில் பேசிய பாஜக எம்பி பிரக்யா தாக்கூர், நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று புகழ்ந்தார். பெரும் சர்ச்சையை  அவரது கருத்துக்கு மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜக சார்பிலும்...

வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோ சேவை தொடக்கம்...!

credit ns7.tv தமிழகத்தில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய ஆட்டோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். காற்று மாசுப்பாட்டை குறைக்கும் விதமாக மின்சார வாகனங்களை தமிழக அரசு சார்பில் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சில மாதங்களுக்கு முன் துபாய் சென்றார். அப்போது தமிழகத்தில்...

கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு!

கீழடி அகழ்வாராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.  மதுரை விமான நிலையத்தில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், கீழடியில் அடுத்தக்கட்ட அகழ்வாராய்ச்சி தொடர்பாக ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு மற்றும் மதுரை பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக...

தமிழக அரசு அலுவலகங்களில் அதிகரிக்கும் லஞ்சம்...!

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் தங்கள் பணிகளைச் செய்ய 100ல் 62 பேர் லஞ்சம் கொடுத்தே செய்து முடித்திருப்பதாக ஆய்வின் முடிவுகளில் தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகரித்துள்தாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தியா முழுக்க அரசு அலுவலகங்களில் லஞ்சம் வழங்குவது தொடர்பாக, இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அரசு சாரா ஊழல் தடுப்பு கண்காணிப்புக் குழுவான டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஆப் இந்தியா என்ற அமைப்பு ஓர் ஆய்வை மேற்கொண்டது....

வியாழன், 28 நவம்பர், 2019

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப. சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம், 3 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர்...

RSS, பாஜக-வின் இதயத்தில் என்ன இருக்கிறதோ அதையேதான் பிரக்யா கூறியுள்ளார்: ராகுல் காந்தி

credit ns7.tv மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்றே பாஜகவும், ஆர்எஸ்எஸ்-ம் கருதுகின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.  எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை சட்டத்திருத்தம் குறித்த விவாதம் மக்களவையில் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு நாதுராம் கோட்சே...

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்!

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.  வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக 3ஆக பிரிக்கப்படும் என சுதந்திர தினவிழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனை அடுத்து புதிதாக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.  இந்நிலையில் இரு மாவட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...!

கனமழை காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இரண்டு வாரங்களுக்கு மேலாக வலுவிழந்து காணப்பட்டது. சென்னையில் பரவலான இடங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது. கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, மைலாப்பூர், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில்...

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...!

ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஐந்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 2020ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெறுகிறது. 2020ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தமிழ் தேர்வு நடைபெறவுள்ளது. ஏப்ரல் 17ம் தேதி ஆங்கில பாடத்திற்கான தேர்வும், ஏப்ரல் 20ம் தேதி கணித பாடத்திற்கான...

திருக்குர்ஆனில் மதநல்லிணக்கம் சம்பந்தமாக சொல்லப்பட்டுள்ளதா?

திருக்குர்ஆனில் மதநல்லிணக்கம் சம்பந்தமாக சொல்லப்பட்டுள்ளதா? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) பீம நகர் - திருச்சி மாவட்டம் - 17-11-2019....

#பாபர்_மஸ்ஜித் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுப்பு காட்சிகள்

#பாபர்_மஸ்ஜித் வழக்கு தீர்ப்பைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் தொகுப்பு காட்சிகள் சேப்பாக்கம் - சென்னை - 18-11-201...

அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்? பவாரின் ‘பவர்’ அரசியல் இனி எப்படி இருக்கும்?

சாணக்கியா அமித்ஷாவின் அரசியல் வியூகம் வெற்றி பெறாதது ஏன்? பவாரின் ‘பவர்’ அரசியல் இனி எப்படி இருக்கும்...

வீகன் உணவு முறை ஆரோக்கியமா? ஆபத்தா?

வீகன் உணவு முறை ஆரோக்கியமா? ஆபத்தா? செய்தியும் சிந்தனையும் - 26/11/19 ...

மராட்டிய தேர்தலும்! செய்தியும் சிந்தனையும் -

ஆர் எஸ் எஸ்ஸின் அழிவும்! மராட்டிய தேர்தலும்! செய்தியும் சிந்தனையும் - 27/11/1...

புதன், 27 நவம்பர், 2019

#எது_எளிமையான_திருமணம்?

#எது_எளிமையான_திருமணம்? ...

அசர வைத்த அண்ணன் சீமான்!

அசர வைத்த அண்ணன் சீமான்! Seeman latest interview in Puthiyathalaimurai Rajini political entry....

திகார் சிறைக்கு சென்று ப.சிதம்பரத்தை சந்தித்தார் ராகுல் காந்தி...!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, திகார் சிறைக்குச் சென்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்தார்.  ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப. சிதம்பரம், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரம், 3 மாதங்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். சிபிஐ தொடர்ந்த...

தமிழகத்தில் தலா ரூ.325 கோடியில் மேலும் 3 மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்!

தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.  தமிழகத்தில் புதியதாக 6 மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அண்மையில் அளித்திருந்த நிலையில், தற்போது மேலும் மூன்று மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதலை மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. திருப்பூர், உதகை, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல்...

பாதுகாப்பற்ற உணவுகளின் தலைநகரா தமிழகம்?

பாதுகாப்பற்ற உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய உணவு தரக்கட்டுபாட்டு நிறுவனத்தின் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக நச்சுத்தன்மை உள்ள பாக்கெட் பால் கிடைப்பதாக அன்மையில் மத்திய அமைச்சர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள்ளாக, பாதுகாப்பற்ற உணவுகள் தமிழகத்தில்...

பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கும் சட்டத்திருத்த மசோத

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர், மற்றும் அரசு குடியிருப்பில் வசிக்கும் முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாருக்கு மட்டுமே எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது.  இந்நிலையில்...

செவ்வாய், 26 நவம்பர், 2019

டெல்லி மக்களை குண்டு வீசி கொன்றுவிடுங்கள்: உச்சநீதிமன்றம் ஆவேசம்!

காற்று மாசுவால் மக்கள் சாவதை விட, வெடிகுண்டுகளை வீசி கொன்று விடுங்கள் என, மத்திய, மாநில அரசுகளை உச்சநீதிமன்றம் சாடியுள்ளது டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவால், மக்கள் பெரும் துயருக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, காற்று மாசை குறைப்பதில், டெல்லி அரசும், மத்திய அரசும் தோல்வியடைந்து...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதங்கம்...!

காங்கிரஸ் கட்சி சொல்ல வேண்டியதை சொல்லாததும், செய்ய வேண்டியதை செய்யாததுமே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வர காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். மத்திய அரசின் நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் கட்சியினர் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது...

உயிர்வாழ் சூழல் இல்லாத உலகின் ஒரே பகுதி இது தான்!

சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களிலேயே உயிர் வாழ் சூழல் உள்ள ஒரே கோளாக பூமி விளங்குகிறது. இருப்பினும் உலகத்தின் ஒரே ஒரு பகுதியில் உயிர்வாழ் சூழலே இல்லாததை தற்போது ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். Nature Ecology and Evolution என்ற அறிவியல் சார்ந்த தகவல்களை வெளியிடும் பத்திரிக்கையில் அண்மையில் வெளியான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றின் மூலம் இத்தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,...

வாயடைக்க செய்யும் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து அபராத தொகை விவரம்!

மோட்டார் வாகனச் சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சுமார் 577 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசின் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்கவும், சாலை விதிகளை மீறுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல்  மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தியது....

மகாராஷ்டிராவில் 162 எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு!

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பலம் இருப்பதை உணர்த்தும் வகையில் மும்பை தனியார் நட்சத்திர ஓட்டலில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 162 பேர் அணிவகுப்பு நடத்தினர்.    மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், அம்மாநில முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிசும், துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும்...

திங்கள், 25 நவம்பர், 2019

நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் வரை ஒத்திவைப்பு!

credit ns7.tv மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மக்களவை இன்று காலை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மகாராஷ்ட்ராவில் நிகழ்த்தப்பட்டுள்ள ஜனநாயகப் படுகொலை குறித்து இந்த அவையில் கேள்வி எழுப்ப விரும்புவதாகவும், ஆனால், அவ்வாறு...

ட்விட்டரில் காங்கிரஸ்காரன் என்ற அடையாளத்தை நீக்கிய ஜோதிராதித்ய சிந்தியா!

தன்னுடைய காங்கிரஸ் அடையாளத்தை ட்விட்டரிலிருந்து நீக்கியுள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா. மத்திய பிரதேசத்தை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்திக்கு நெருக்கமானவருமான ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வருவது வெட்டவெளிச்சமாகியுள்ளது.  புகழ்பெற்ற குவாலியர் அரசவம்சத்தை சேர்ந்தவரான காங்கிரஸ் மூத்த தலைவர்,...

பாபர் மசூதி வழக்கு : காங்கிரஸ் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

வாக்கு வங்கி அரசியல் காரணமாகவே அயோத்தி பிரச்னைக்கு காங்கிரஸ் தீர்வு காணவில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.  ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அம்மாநிலத்தின் தல்டோன்கன்ச் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அப்போது, அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் சிக்கல் நீடித்து வந்ததற்கு...

ஞாயிறு, 24 நவம்பர், 2019

இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள்: திருச்சி சிவா

credit ns7.tv இறந்தவர்களை வெளியில் தோண்டி எடுத்து கலங்கப்படுத்துவதை விட்டுவிடுங்கள் என சென்னையில் நடைபெற்ற திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் சென்னை ராயப்பேட்டையில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மாநிலங்களவை...

பாலில் நச்சு: தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்...!

தமிழகத்தில் பாலில் நச்சுத்தன்மை கலந்திருப்பது குறித்து, முதலமைச்சர் தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பாலில் நச்சுத்தன்மை குறித்து திமுக எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டியுள்ளார். கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான...

இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு இல்லை - சென்னை உயர்நீதிமன்றம்

இறை வழிபாட்டை தடை செய்யும் அதிகாரம் அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் நாராயணமங்கலம் கிராமத்தில் தேர் பவனி நடத்த அனுமதிக்க உத்தரவிடக்கோரி வரதராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, வருவாய் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டார்....

ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்க மாட்டோம் : சரத்பவார் திட்டவட்டம்

credit ns7.tv தேசியவாத காங்கிரஸ் ஒருபோதும் பாஜகவுடன் கைகோர்க்காது என்று அக்கட்சியின் தலைவர் சரத்பவார் திட்டவட்டமாக கூறியுள்ளார். மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்,  தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேடல் ஆகியோர் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர்....

யார் இந்த அஜித் பவார்?

மகாராஷ்டிரா அரசியலில், திடீர் திருப்பத்தை ஏற்படுத்திய அஜித் பவாரின் அரசியல்  பயணம் குறித்து தற்போது பார்ப்போம்... ➤ தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அண்ணன் ஆனந்த் பவாரின் மகனாக 1959-ம் ஆண்டு பிறந்தார் அஜித் பவார். தந்தை மறைந்ததும் சரத் பாவரின் அரவணைப்பில் வளர்ந்தார்.  ➤ 1982-ம் ஆண்டு அரசியலில் நுழைந்த அஜித் பவார் அதே ஆண்டு கூட்டுறவு...