தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சென்னை கிண்டியில், தொழில் வளர் தமிழ்நாடு முதலீடுகள் மற்றும் திறன் மேம்பாட்டு அமர்வு நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் எம்.சி.சம்பத், நிலோஃபர் கபில், அரசு செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஐந்தாயிரத்து 27 கோடி ரூபாய் முதலீட்டில், 20 ஆயிரத்து 351 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், ஒன்பது தொழில் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், மூன்று உயர்நிலை திறன் மேம்பாட்டு மையங்களையும், 28 கோடியே 43 லட்சம் மதிப்பில் இரண்டு புதிய தொழில் பயிற்சி நிலையங்களை அமைக்கவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட மூன்று அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்கள், தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், டி.ஆர்.டி.ஓ மற்றும் சென்னை ஐஐடி இடையே, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில் பெருவழித் திட்டத்திற்காக, புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையழுத்தாகின. தொழில் நிறுவனங்களுக்கு குறைதீர்க்க உதவும், Biz Buddy தொழில் நண்பன் இணையதளம், நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது
credit ns7.tv