வியாழன், 5 டிசம்பர், 2019

106 நாட்களுக்குப் பின் சிறையிலிருந்து வெளியே வந்த ப.சிதம்பரம்!

credit ns7.tv
Image
106 நாட்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து, டெல்லி திகார் சிறையில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்றிரவு விடுவிக்கப்பட்டார். அவரை காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானோர் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிப்பதாகவும், இந்த வழக்கு குறித்து பேச விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். 
தமக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்த சிதம்பரம், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று தெளிவாக பேசுவதாகவும் கூறினார். சிறையில் இருந்து வெளியே வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார். இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இன்று முதல் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர், சுமார் 20 நிமிடங்கள் கழித்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார்.