இந்திய கடல் எல்லையில் சீன கப்பல் ஒன்று அத்து மீறி ஊடுருவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் சீனா கப்பல் ஒன்று உளவு பார்த்துள்ளது. அனுமதியின்றி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த ஷி யான் - 1 என்ற அந்த கப்பலை உடனடியாக வெளியேறுமாறு இந்திய கடற்படை எச்சரித்துள்ளது. இந்திய கடல் எல்லையை பயன்படுத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் இந்திய கடற்படை அறிவுறுத்தியுள்ளது.
இந்திய பெருங்கடலில் சீனா கப்பல்களின் வருகை அதிகரித்திருப்பதாகவும், அதனை இந்திய கடற்படை கூர்ந்து கவனித்து வருவதாகவும் அதன் தலைவரான கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சவால்களை சமாளிக்க தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், எல்லையில் நிகழும் பிரச்சனைகளை இந்திய கடற்படை முறியடிக்கும் என தெரிவித்துள்ளார்.
credit ns7.tv