வியாழன், 5 டிசம்பர், 2019

ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல் 2019 - முதலிடத்தில் எந்த மாநிலம்?

Image
அரசியல் மற்றும் அரசு சாரா அமைப்பான Transparency international, ஊழல் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை தேசிய அளவில் நடத்தியுள்ளது. இது தொடர்பான அறிக்கையை 'India Corruption Survey-2019' என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள 248 மாவட்டங்களில், 2 லட்சத்திற்கும் அதிகமான கிராமப்புற, நகர்ப்புறவாசிகளிடம் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் எந்தளவிற்கு ஊழல் நடைபெறுகிறது என்பது குறித்து பல தரப்பினரும் அளித்த தகவல்களை வைத்து நாட்டின் ஊழல் நிறைந்த மாநிலங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 51% இந்தியர்கள் லஞ்சம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை தற்போது காணலாம்...
8. தமிழ்நாடு:
தங்கள் வேலைகளுக்காக 62% பேர் லஞ்சம் கொடுத்துள்ளதாக இந்த கணாக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. 35% பேர் பல முறையும், 27% ஒரு முறை அல்லது இரண்டு முறையும் லஞ்சம் கொடுத்திருப்பதாக தெரிவித்திருந்த நிலையில் 8% பேர் மட்டுமே லஞ்சம் கொடுக்காமல் இருந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
7. கர்நாடகா:
கர்நாடக மாநிலத்தில் சுமார் 63% பேர் தங்கள் வேலைகளுக்காக லஞ்சம் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
6. பஞ்சாப்:
கர்நாடகம் போலவே பஞ்சாபிலும் 63% பேர் தங்கள் வேலைகளுக்காக லஞ்சம் அளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
5வது இடத்தில் தெலங்கானாவும் (67%), 4வது இடத்தில் உத்தரப்பிரதேசமும் (74%), 3வது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் (74%), 2வது இடத்தில் பீகாரும் (75%) உள்ளன.
நாட்டிலேயே அதிக அளவாக 78% பேர் லஞ்சம் அளித்திருப்பதாக தெரிவித்துள்ள ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. 
கோவா, ஒடிசா, கேரளா, ஹரியானா மாநிலங்களில் லஞ்சம் குறைவாக இருப்பதும் இந்த கணக்கெடுப்பின் வாயிலாக தெரியவந்துள்ளது.

credit ns7.tv