ஞாயிறு, 1 டிசம்பர், 2019

உள்ளாட்சித் தேர்தல் : உச்சநீதிமன்றத்தை நாடியது ஏன்? - மு.க.ஸ்டாலின் விளக்கம்

Image
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அல்ல, நியாயத்தை நிலை நிறுத்தவே நீதிமன்றத்தை நாடியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
சென்னை கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை என்றும் அப்படி ஒரு பொய் பிரச்சாரத்தை முதலமைச்சர் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். திமுக, தேர்தலை எந்த நேரமும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் வார்டு வரையறை இடஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தில் பலமுறை முறையிட்டும், அதனை வெளியிட தேர்தல் ஆணையம் முன்வரவில்லை என புகார் தெரிவித்த ஸ்டாலின், அதன் காரணமாகவே உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதை வரவேற்பதாகவும், அதே வேளையில் தொகுதி வரையறை உள்ளிட்ட பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டுள்ளார். 

credit ns7tv

Related Posts: