ஞாயிறு, 8 டிசம்பர், 2019

அதிகரிக்கும் பாலியல் குற்றங்களால் இந்தியாவின் மதிப்பு கெடுவதாக, ராகுல்காந்தி விமர்சனம்!

Image
அதிகரிக்கும் பாலியல் குற்றங்களால் இந்தியாவின் மதிப்பு கெடுவதாக, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 
கேரள மாநிலம் வயநாட்டில்  நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சர்வதேச அளவில் பாலியல் வன்கொடுமை நகரமாக இந்தியா திகழ்வதாக வேதனை தெரிவித்தார். பெண்கள்  பாதுகாப்பில் இந்தியா ஏன் அக்கறை செலுத்தவில்லை என வெளிநாடுகள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் விமர்சித்தார். 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், ஆனால் அதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார். 
credit ns7.tv

Related Posts: