ஞாயிறு, 15 டிசம்பர், 2019

21 அத்தியாவசிய மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை உயர்வு!

Image
21 அத்தியாவசிய மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளன.
பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்து, தொழுநோய் எதிர்ப்பு மருந்தான டாப்சோன், ஆண்டிபயாட்டிக் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட மருந்துகளின் மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவற்றை தயாரிப்பதை பெரும்பாலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
மூலப்பொருள் விலை ஏற்றத்தால் மருந்துகளின் விலையை உயர்த்த அனுமதிக்குமாறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதால் 21 வகையான அத்தியாவசிய மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் முதற்கட்ட சிகிச்சை முறைகளில் பயன்படுத்தப்படுவதால், அவை சந்தையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய விரும்புகிறது. இதை அடுத்தே விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

credit ns7.tv