சனி, 7 டிசம்பர், 2019

சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகளை மீட்க அரசு நடவடிவடிக்கை எடுக்க வேண்டும் - மீனவர்கள் கோரிக்கை

Image
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது வீசிய சூறைக்காற்றால் சேதமடைந்த படகுகளை மீட்க அரசு நடவடிவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கன்னியாகுமரி அருகே உள்ள வல்லவிளையைச் சேர்ந்த மீனவர்கள் 250-க்கும் அதிகமானோர், கர்நாடக மாநிலம் அருகே ஆழ்கடலில் 60-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வீசிய சூறைக்காற்றால், படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்தன. கடலில் தத்தளித்த மீனவர்களை அந்த வழியாக வந்த  தனியார் வணிகக்கப்பல் மீட்டு, கப்பலிலேயே தங்க வைத்தனர்.
பின்னர், தகவலறிந்து சென்ற இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து, கடலில் உள்ள விசைப்படகுகளை கரைக்கு கொண்டு வரும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். படகுகளை மீட்க அரசு உதவ வேண்டும் என்றும் அவர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

credit ns7.tv