வியாழன், 5 டிசம்பர், 2019

ப.சிதம்பரம் அதிக நாட்கள் சிறையில் சிரமப்பட்டு விட்டார் - வைகோ உருக்கம்!

Image
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது மகிழ்ச்சி அளிப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிக நாட்கள் சிறையில் சிரமப்பட்டு விட்டார் என்றும், அதற்காக தாம் கவலைப்பட்டதாகவும் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நீதி கேட்டு போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல், கண்டனத்துக்குரியது எனவும் வைகோ குற்றம்சாட்டினார்.
வார்டுகளை முறையாக பிரிக்காத நிலையில், உள்ளாட்சித் தேர்தலை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு முற்றிலும் மாறான செயல் என வைகோ தெரிவித்தார். 
credit ns7.tv

Related Posts: