1. பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
2. வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
3. திரையரங்குகள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள், கடற்கரை, சுற்றுலா தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய மற்றும் கூட்ட அரங்குகளளுக்கு அனுமதி இல்லை.
4. அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுக்ள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி இல்லை.
5. பொதுமக்களுக்கான விமான, ரயில், பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி இல்லை.
6. டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷாகளுக்கு அனுமதி இல்லை.
7. மெட்ரோ ரயில், மாநிலங்களுக்கிடையிலான பேருந்து போக்குவரத்து, பொதுமக்கள் போக்குவரத்து அனுமதி இல்லை.
8. பணியாளர் விடுதிகள் தவிர பிற தங்கும் விடுதிகள், தங்கும் ஹோட்டல்கள், ரிசார்டுகளுக்கு அனுமதி இல்லை.
9. இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்க கூடாது
.
.
10. திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்.
credit ns7.tv