தமிழகத்தில் தளர்வுகளின் போது இயங்கக் கூடியவை குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று கூடிய தமிழக அமைச்சரவை தமிழத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்தும் மற்றும் கொரோனா நிலவரம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. ஊரடங்கு நீட்டிப்புக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது குறித்து தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை தவிர, தமிழத்தின் பிற பகுதிகளில் தளர்வுகள் குறித்து அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்ததாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் என்னென்ன தளர்வுகள்:
மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு வெளியிலுள்ள பகுதிகளில், அதாவது ஊரக மற்றம் பேரூராட்சி பகுதிகளில், உள்ள அனைத்து தொழிற்சாலைகள் (ஜவுளித்துறை உட்பட) செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதாவது 50% பணியாளர்களை கொண்டு செயல்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
15,000-க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பேரூராட்சிகளில் மட்டும், மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து சூழ்நிலைக்கேற்ப, ஜவுளித்துறை 3 நிறுவனங்களை 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
SEZ, EOU :
நகரம் மற்றும் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்பேட்டை மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. நகரங்களிலுள்ள தொழிற்பேட்டைகளில், ஜவுளித்துறை நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
நகர்புறங்களில், உள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் சூழ்நிலைக்கேற்ப 50% பணியாளர்களை கொண்டு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மின்னணு ஹார்டுவேர் உற்பத்தியும் 50% தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி. கிராமங்களில் நூற்பாலைகள் 50% பணியாளர்களை கொண்டு சமூக இடைவெளியுடன் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
நகரப்பகுதிகளில் உள்ள தோல் பொருட்கள், ஆடை ஏற்றுமதிக்கான டிசைனிங் மற்றும் சாம்பிள் உருவாக்க நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலை பெற்று 30% பணியாளர்களுடன் இயங்கலாம்
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி
நகர்ப்புறங்களில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி, பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி. அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகளுக்கு அனுமதி. அச்சகங்கள் செயல்பட அனுமதி.
பிளம்பர், எலக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் போன்ற பணியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
கட்டுமான பணிகளுக்கு தேவையான ஹார்டுவெர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், சானிடரிவேர், மின்சாதன விற்பனை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. (கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல எந்த தடையும் இல்லை)
நகராட்சி, மாநகராட்சிகளில் வணிக வளாகங்கள் தவிர்த்து அனைத்து தனிக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கலாம்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக் கடைகள், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்
உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்.
மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் பழுது நீக்கும், கண்கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி.
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள மால்கள் மற்றும் வணிக
வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள்,
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் அனுமதிக்கலாம்.
வளாகங்கள் தவிர்த்து, அனைத்து தனிக்கடைகள்,
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் அனுமதிக்கலாம்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், கிராமப்புற தொழில்கள், தனிக்கடைகள் ஆகியவை செயல்பட தனி அனுமதி தேவையில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேற்கண்ட அறிவிப்புகள் எல்லாம் விதிமுறைகளை பின்பற்றியும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பணியிடங்களில் உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
credit ns7.tv