டெல்லி போலீசார், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
டெல்லி வன்முறையில் தொடர்பு உள்ளதாக கருதப்படும் ஜாமியா பல்கலை மாணவி ஷபூரா ஜர்காரை, டெல்லி போலீசார், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றன. வடக்கு டெல்லி பகுதியில், ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் சார்பிலும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இந்த போராட்டம் தொடர்பாக, அப்பல்கலைகழக மாணவி ஷபூரா ஜர்கார் என்பவரை சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளனர். அந்த மாணவி கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜர்காரிடம் அவரது கணவர் தொலைபேசியில் இரண்டு முறை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது வீட்டில் உள்ளவர்களின் நலன் குறித்து அவர் விசாரித்துள்ளார்.
பெயரை தெரிவிக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்த நிலையில், அவரது கணவர் நம்மிடம் தெரிவித்ததாவது, டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில், ஜர்கார் எப்படி திருமணம் ஆகாமலேயே கர்ப்பமானார் போன்ற அவதூறு செய்திகள் அதிகம் பரவின. இதனால், ஜர்கார் மிகவும் மனம்நொந்து போனார். இந்த விஷயத்தை மனதில் ஏற்றிக்கொள்ளாதே என்று நான் தான் அவளுக்கு அறிவுறுத்தினேன்.
ஏப்ரல் 13ம் தேதிக்கு பிறகு அவளை பார்க்க சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இரண்டு முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். வீட்டில் உள்ளவர்கள் குறித்தே அவர் நலம் விசாரித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, கடிதம், மணி ஆர்டர் உள்ளிட்டவைகளை கூட, சிறை நிர்வாகம் தற்போது உள்ளே அனுமதிப்பதில்லை என அவர் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 22 -23 ம் தேதிகளில், டெல்லி ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் நிலைய முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஜர்கார் பங்கேற்றிருந்தார். இதுதொடர்பாக, ஏப்ரல் 13ம் தேதி, டெல்லி போலீசார், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைது செய்யும்போது அவர் 13 வார கருவை தனது வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார்.
டெல்லி வன்முறை தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் ஜர்காரின் பெயர் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டபின்னரும், அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
டெல்லி வன்முறை தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் ஜர்காரின் பெயர் இல்லை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டபின்னரும், அவரது ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்றம், கர்ப்பிணி பெண்ணை விடுவிக்க உத்தரவிட்டும், மற்றொரு வழக்கு தொடர்பாக அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜர்காரின் சகோதரி கூறியதாவது, தாங்கள் மிகவும் வேதனையுடன் உள்ளோம். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதன் காரணமாக, எங்களால் அவளை சந்திக்க இயலவில்லை. அவர் சிறிதுசிறிதாக செத்து கொண்டிருக்கிறாள். எங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை உண்டு. அவள் விரைவில் குற்றமற்றவள் என்று நிரூபிக்கப்பட்டு விரைவில் எங்களை வந்தடைவாள் என்ற நம்பிக்கை தங்களுக்கு உள்ளதாக அவர் கூறினார்.

ஜர்கார் நன்றாக படிக்கும் மாணவி. பிறருக்கு உதவுவதில் அதிக ஈடுபாடு காட்டுபவர் என்று அவரை சார்ந்தோர் தெரிவித்துள்ளனர்.
டெல்லி சிறைத்துறை டிஜி சந்தீப் கோயல் தெரிவித்துள்ளதாவது, ஜர்கார் சிறையில் நல்ல உடல்நலத்துடனேயே உள்ளார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் சிகிச்சையளிக்க மருத்துவக்குழு தயாராகவே உள்ளது. ஜர்கார் தற்போது ரம்ஜான் நோன்பு கடைப்பிடித்து வருகிறார். நோன்பு இருப்பவர்களுக்காக அவர்கள் விரும்பும் உணவு வகைகள் சிறையில் வழங்கப்பட்டு வருகிறது. ஜர்கார் விசாரணைக்கைதி என்பதால், அவர் சிறையில் வேறு பணிகளை மேற்கொள்ள அவர் விருப்பம் தெரிவிப்பதில்லை என்று அவர் கூறினார்.
தங்களுக்கு இந்திய நீதித்துறையின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அவர் விரைவில் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு தங்களை வந்தடைவார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.