தமிழக அரசு அலுவலகங்கள், இன்று காலை முதல் வழக்கம் போல் செயல்பட தொடங்கியுள்ளன.
நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி, சுழற்சி முறையில் 50 சதவீத பணியாளர்களுடன், வாரத்தில் ஆறு நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படும், என தமிழக அரசு அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்று அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படத் தொடங்கின. தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி, முதல் பிரிவு ஊழியர்கள் திங்கள், செவ்வாய் கிழமைகளிலும், இரண்டாம் பிரிவு ஊழியர்கள் புதன், வியாழன் கிழமைகளிலும் பணியாற்றுவர். மீண்டும் முதல் பிரிவு ஊழியர்கள் வெள்ளி, சனி பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஊழியர்கள் அடுத்தடுத்து சுழற்சி முறையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
'குரூப் - ஏ' பிரிவு அலுவலர்கள், வாரத்தின் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும், என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், ஆணையங்கள், வாரியங்கள், அரசு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகளும், இந்த சுழற்சி முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv