சனி, 2 மே, 2020

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 63% பேர் ஆண்கள்!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 63 சதவீதம்பேர் ஆண்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதியான ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில், கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதாவது, வடசென்னையில் மட்டும் பாதிப்பு விகிதம், 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  
9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 34 பேரும்,
10 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் 109 பேரும்,
20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 242 பேரும்,
30 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் 237 பேரும்,
40 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் 195 பேரும்,
50 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 137 பேரும்,
60 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள் 81 பேரும்,
70 முதல் 79 வயதுக்குட்பட்டவர்கள் 28 பேரும்,
80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 13 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 Ias

மேலும் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடதக்கது.
credit ns7.tv