சனி, 2 மே, 2020

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எவை இயங்கலாம்?


Image
கொரோனா அச்சுறுத்தல் கட்டுக்குள் வராததால், நாடு முழுவதும் ஊரடங்கு வரும் 17 ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. தற்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் ஊரகப்பகுதிகள் மற்றும் சென்னை என இரண்டு பகுதிகளாக பிரித்து,  கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தனித்தனியே  வகுத்துள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எவை இயங்கலாம்? 

தடை செய்யப்பட்ட ( Containment zone) பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி எந்தவித தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
1. அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள், சாலை பணிகளுக்கு அனுமதி. பணிகள் நடைபெறும் இடத்திலேயே தொழிலாளர்கள் இருக்கும்பட்சத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி
2. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 10% பணியாளர்களை (குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி; நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் 
3. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
4. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கலாம்
5. முடி திருத்தகங்கள்/அழகு நிலையங்கள் தவிர அனைத்து தனி கடைகள், ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமான பொருட்கள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார், கண்கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி
6. பிளம்பர், எலக்ட்ரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் போன்ற பணியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர்/ மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று பணிபுரியலாம்.
7. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி மற்றும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் (SEZ, EOU, Export units) மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்று 25% பணியாளர்களை ( குறைந்தது 20 பேர்) கொண்டு செயல்பட அனுமதி. நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் மட்டுமே பணியாளர்கள் வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இது தவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படும். 

வேளாண் சார்ந்த பணிகள், தொழில்கள், தொழில் மற்றும் வணிக செயல்பாடுகள், மருத்துவ பணிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துறைகள், வங்கிகள், அம்மா உணவகங்கள், ATM, ஆதரவற்றோர் இல்லங்கள் எவ்வித தங்குதடையுமின்றி தொடர்ந்து முழுமையாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
credit ns7.tv