புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், பிரதமர் மோடியின் உரை இல்லாததால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுவரை 3 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு, வரும் 17ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இதுகுறித்து, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, பிரதமர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை, நாட்டிற்கும், ஊடகங்களுக்கும் வெறும் தலைப்பு செய்தியாக மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு மனமுவந்து உதவி அளிப்பதாக அறிவித்திருந்தால், காங்கிரஸ் கட்சி அதனை வரவேற்றிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரங்களை நிவர்த்தி செய்யும் வகையில், மோடியின் உரை இல்லை என்பதால், இந்தியா ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
credit ns7.tv