- பொருளாதார சிக்கலை சமாளிக்க சுமார் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு ஒதுக்கப்படும். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிதித் தொகுப்பு பயன்படுத்தப்படும் விவரங்களை மத்திய நிதியமைச்சர் நாளை அறிவிப்பார்.
- உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது. உள்நாட்டு பொருட்களுக்கு இந்திய மக்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- இந்தியாவை சுயசார்புள்ள நாடாக மாற்றுவது மட்டும் தான் 21ம் நூற்றாண்டை இந்தியாவுக்கு சொந்தமானதாக மாற்றுவதற்கான வழி
- கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல் மற்றும் மாற்றங்கள் மக்களின் மன வலிமையை வெளிக்கொணர்ந்துள்ளது.
- உட்கட்டமைப்பை இந்தியாவின் புதிய அடையாளமாக மாற்ற வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற நம்மை நாமே பாதுகாக்க வேண்டியது அவசியம்.
- ஜன்தன், ஆதார் திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் கொரோனா பாதிப்ப்பு ஏற்பட்டுள்ள இந்த சமயத்தில் பயன் அளிக்கின்றன.
- தேவைகளை பூர்த்தி செய்ய உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அரசு செய்யும் சீர்திருத்தங்கள் விவசாயிகளின் உற்பத்தி சங்கிலியை வலுப்படுத்தும். நாட்டின் ஏழை மக்கள் முன்னேற்றுவதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
- கொரோனா தொற்று பரவ ஆரம்பித்த சமயத்தில் இந்தியாவில் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படவில்லை என்றும், தற்போது தினமும் 2 லட்சம் பாதுகாப்பு உபகரணங்களையும், 2 லட்சம் N95 முகக்கவசங்களையும் தயாரித்து வருகிறோம்.
- வளர்ச்சி பாதைக்கு இந்தியா திரும்பிவிட்டது. இந்தியாவின் திறன் மீது உலக நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.
- உலகம் என்பது ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு. இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளின் வளர்ச்சிக்கு வித்திடும். இந்தியா அளித்துள்ள மருந்துகள் உலகில் உள்ள மக்களின் உயிர்களை காப்பாற்றியுள்ளது.
- கொரோனா நீண்ட நாட்களுக்கு நம் வாழ்வில் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால் நமது வாழ்க்கை கொரோனாவை சுற்றியே இருக்க முடியாது.
- நாம் முக்கவசம் அணிந்து கொள்வோம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம். ஆனால் கொரோனா நம்மை தாக்க அனுமதிக்கக் கூடாது.
- மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வரும். இதுகுறித்த விவரங்கள் மே 18ம் தேதிக்கு முன்பாக வெளியிடப்படும்.
நான்காம் கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். புதிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்.