ஞாயிறு, 10 மே, 2020

ஆட்டிசம் பாதிப்பு குழந்தைகளுக்கு உதவும் செல்லப்பிராணிகள்

ஆட்டிசத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயம் மற்றும் தொடர்புகொள்வதில் சிக்கல் ஆகியவை ஏற்படும். இவற்றை களைவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் செல்லப்பிராணிகள் உதவுவதாக ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது, பெற்றோருக்கும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் இடையே உள்ள உறவு பலமடைவதற்கு உதவுவதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதாகவும் தற்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன நல ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கு வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பது சிறந்தது. மன நல ஆரோக்கியம் மற்றும் செல்ல பிராணிகள் வளர்ப்பு தொடர்பாக பல ஆண்டுகளாக, பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளது. அவற்றில் சில மனிதர்கள் தங்கள் செல்ல பிராணிகளை கவனித்துக்கொள்ளும்போது, அவர்களின் மன அழுத்தம் குறைவதாகவும், அவர்களின் மன நலன் சார்ந்த பிரச்னைகளை கையாள்வதில், அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால், அவர்களின் அனுபவங்கள் சிகிச்சையைப்போல் உள்ளது.
வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது, பெற்றோருக்கும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் இடையே உள்ள உறவு பலமடைவதற்கு உதவுவதாகவும், மன அழுத்தத்தை குறைப்பதாகவும் தற்போதைய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மிசோரி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி, மற்ற பெற்றோர்களைவிட, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு, அக்ககுழந்தைகளை வளர்க்கும்போது அதிகளவில் மன அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறது.
சில ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில பிரச்னைகள் இருக்கும். அந்த குறிப்பிட்ட குழந்தைகளுக்கு பெரிய, சத்தமாக குறைக்கக்கூடிய நாய் உணர்ச்சிகள் அதிகரிக்காமல் காக்கிறது. அமைதியான பூனை கூட அக்குழந்தைக்கு உதவுவதாக உள்ளது என்று ஆய்வின் ஆராய்ச்சியாளர் கிரிச்சன் கர்லஸ்லி கூறுகிறார்.
இந்த ஆய்வுக்காக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைப்பை சேர்ந்த 700 குடும்பங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. நாயோ அல்லது பூனையோ வளர்ப்பு பிராணியாக வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் சுமைகள் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நாள் முழுவதும் செல்லப்பிராணியை பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு இருந்தாலும், அது ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும், செல்லபிராணிகளுக்கும் இடையே ஒரு பினைப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சி சுட்டிக்காட்டுகிறது. அதிகமான செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் பெற்றோர் அதிக நன்மைகளை கூறியிருந்தனர்.
மற்றவற்றைவிட, ஆட்டிசத்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பயம் மற்றும் தொடர்புகொள்வதில் சிக்கல் ஆகியவை ஏற்படும். இவற்றை களைவதற்கு குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் செல்லப்பிராணிகள் உதவுவதாக ஆராய்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் பழகும் தன்மையை அதிகரித்து, பயம் மற்றும் மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது. பல ஆண்டுகளாக செல்லப்பிராணிகளுக்கும், மன அழுத்தத்திற்கும் தொடர்பு உள்ளதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தான் விலங்குகள் உதவியுடன், மன நலன் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சைகள் வடிவமைக்கப்பட்டு, அவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதால், பயம் மற்றும் மன அழுத்தம் குறைகிறது. தன்னம்பிக்கை, சுயமரியாதை மற்றும் நல வாழ்வு மேம்படுவதற்கு உதவுகிறது.
தமிழில் : R.பிரியதர்சினி.