டெல்லியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிமாநிலங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர்.
Credit : NS7
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்கள் அழைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. மேலும் தொழிலாளர்களை அழைத்துச் செல்ல ஷ்ராமிக் சிறப்பு ரயிகளும் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல தொழிலாளர்கள் நடைப் பயணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள சுக்தேவ் விஹார் பகுதியில் நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஹரியாணா மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் ஜான்சிக்கு தாங்கள் செல்வதாக தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதைடுத்து, ஜான்சிக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை ராகுல் காந்தி செய்து கொடுத்தார்.