credit ns7.tv
நிதியமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களில் ஏழைகளுக்கு எதுவுமில்லை என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்பதற்காக 20 லட்சம் கோடி சிறப்பு நிதி தொகுப்பு ஒதுக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதற்கான விரிவான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வழங்கினார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், லட்சக்கணக்கான ஏழைகளுக்கும் பசிப் பட்டினியால் வாடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எதையும் அறிவிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதுவரை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடைபயணமாக சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருப்பதாகக் கூறிய ப. சிதம்பரம், அவர்களின் நலனுக்கு மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ளார். அன்றாட வருவாயை நம்பியுள்ள தொழிலாளர்கள் மீது மிகப்பெரிய அடி விழுந்துள்ளதாகக் கூறிய ப.சிதம்பரம், சிறு குறு தொழில்களின் வளர்ச்சிக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களை தவிர மற்ற அறிவிப்புகள் அனைத்தும் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.