1. தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை தினமும் இருமுறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்
2. மணிக்கு ஒரு முறை கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்
3. தொழில் வளாகத்திற்குள் தொழிலாளர்கள் உள்ளே செல்வதற்கு முன் அவர்களின் உடல் வெப்பத்தை உறுதி செய்திட வேண்டும்
4. தொழிலாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி இருக்க வேண்டும்
5. சோப்பு அல்லது சானிடைசர்கள் மூலம் தொழிலாளர்கள் அவ்வப்போது தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்
6. 55 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அழைக்க வேண்டும்
7. 200 தொழிலாளர்கள் வரை வேலை செய்யும் நிறுவனங்கள், தேவை இருப்பின் மருத்துவரை அழைக்கும் போது வருமாறு ஏற்பாடு செய்திருக்க வேண்டும்
8. 200 முதல் 1000 தொழிலாளர்கள் வேலை செய்யும் நிறுவனங்களில் இரு தினங்களுக்கு ஒரு முறை பகுதி நேர மருத்துவர் ஒருவர் தொழில் செய்யும் நிறுவனத்திற்கு வந்து சோதனை செய்ய வேண்டும்.
9. 1000 தொழிலாளர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும்.
credit ns7.tv