அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயில்கள்:
சென்னைக்கான சிறப்பு ரயில்கள்:
புது டெல்லியில் இருந்து சென்னைக்கு வரும் 13ம் தேதி (புதன்கிழமை) சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. 15ம் தேதி(வெள்ளிக்கிழமை) அதே ரயில் மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறது.
பயணம் செய்வதற்கான முன்பதிவு டிக்கெட் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும், ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட வழங்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு மே 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கும் என்றும் ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ள்ளது. மேலும், ரயில் நிலையங்களில் டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் மூடப்பட்டிருக்கும், கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகள் உட்பட வழங்கப்படாது என்று ரயில்வே தெரிவித்துள்ளது.
பயணம் செய்வதற்கான உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே ரயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் முகக்கவசம் அணிந்து புறப்படும்போது தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு கட்டாயமாக உட்படுத்தப்படுவார்கள். மேலும், இருமல், தும்மல், காய்ச்சல் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
credit indianexpress.com