திங்கள், 11 மே, 2020

காசிரங்கா தேசிய பூங்காவில் வேட்டையாடப்படும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்!


Image
அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்தி அங்கு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
உலகின் அழிந்து வரும் வனவிலங்குகள் பட்டியலில் ஒன்றாக ஒற்றை கொம்பு காண்டாமிருகமும் இருந்து வருகிறது. இது இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படும் ஒரு அரிய வகை விலங்களில் ஒன்று. இது இந்தியாவில் அசாம் மாநிலத்தில் உள்ள காடுகளிலும் புல்வெளிப் பகுதிகளும் அதிக அளவில் வாழ்ந்து வந்தன. ஆனால் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டு வந்தன. இதனால் இந்தியாவில் அதன் எண்ணிக்கை படிப்பாடியாக குறையத் தொடங்கியது. இதனிடையே ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் காண்டாமிருகங்களை காண இந்திய வைசிராயின் மனைவி சென்றிருந்தார். ஆனால் காடுகளில் காண்டமிருகங்கள் தென்படவில்லை. இதனை அடுத்து காண்டாமிருகங்களை பாதுகாக்க 1908 ஆம் ஆண்டு 850 சதுர கிலோ மீட்டர் பரபப்பளவில் காசிரங்கா தேசிய பூங்கா அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்பட்டாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பூங்கா மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள வேட்டை கும்பல்கள் மீண்டும் காண்டாமிருகங்களை வேட்டையாடத் தொடங்கியுள்ளன. காசிரங்கா தேசிய பூங்காவை ஒட்டுயுள்ள சாலைகளில் வாகனப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் காண்டாமிருங்கள் காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரிகின்றன. தற்போது இதுவே வேட்டையாளர்கள் வேட்டையாடுவதற்கான வாய்ப்பை அமைத்துத்தந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள காசிரங்கா தேசிய பூங்காவின் இயக்குனர், 2 நாட்களுக்கு முன்னர் ஒரு ஒற்றை கொம்பு காண்டாமிருகம் கொல்லப்பட்டு கிடந்ததாகவும் அதன் கொம்பை மட்டும் வேட்டையாளர்கள் எடுத்து சென்றுள்ளனர் என தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் ஏகே 47 துப்பாக்கியின் குண்டுகள் கிடைத்தாகவும் கடந்த மாதம் 4 முறை வேட்டையாளர்கள் விலங்குகளை வேட்டையாட முயற்சித்த சம்பவங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 
ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தின் கொம்பில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. காய்ச்சல், யூரிக் அமில வளர்சிதைமாற்றப் பாதிப்பு, தூக்கமின்மை மற்றும் மூளையிலும், தண்டுவடத்திலும் வீக்கம் உள்பட பல்வேறு நோய்களுக்கு இந்த விலங்குகளின் உறுப்புகள் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படுகின்றன. ஆனால், இவற்றால் ஏற்படும் பயன்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இது போன்ற விலங்குகளை அதிகம் இறக்குமதி செய்யும் நாடாக சீனா இருந்துவந்தது. இதை அடுத்து சர்வதேச நாடுகளில் அழுத்தம் காரணமாக கடந்த 1993 ஆம் ஆண்டு இது போன்ற விலங்குகளில் இறக்குமதியை தடை செய்து. 
ஆனாலும் தற்போது இந்த விலங்குகளின் கொம்புகள் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒரு கிலோ காண்டாமிருகக் கொம்பிற்கு 1,50,000 அமெரிக்கா டாலர்கள் வரை விலைக்கிடைப்பதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இதை தேடி வரும் சமூக விரோதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
credit ns7