திங்கள், 18 மே, 2020

TV நேரலையில் கொரோனா சோதனை செய்துகொண்ட நியூயார்க் மேயர்!

நியூயார்க் மேயர் ஆண்டிரூ கியூமோ, நேற்று தொலைக்காட்சி நேரலையின் போது கொரோனா தொற்றுக்காக பரிசோதனை செய்துகொண்டதுடன், அறிகுறி இருப்பவர்கள் மற்றும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியிருக்கலாம் என கருதுபவர்கள் தன்னை போலவே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
கொரோனாவால் உலகில் அதிக பாதிப்புக்குள்ளாகிய அமெரிக்காவின் வைரஸ் ஹாட்ஸ்பாட்டாக உள்ளது நியூயார்க் மாகாணம். அங்கு மட்டுமே இதுவரை 3.59 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 28 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே கொரோனா தொடர்பாக டிவி நேரலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நியூயார்க் மேயர் ஆண்டிரூ கியூமோ, அங்கு நேயர்கள் முன்னிலையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.
பின்னர் அவர் பேசியபோது, நாம் அனைவரும் ஒற்றுமையுடன், புத்திசாலித்தனத்துடன், ஒழுக்கமாகவும் இருக்க வேண்டும், உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும், நியூயார்க்வாசிகளையும் நேசிக்க வேண்டும். நான் நாளை உங்கள் முன் வரவில்லை என்றால் என கொரோனா உறுதியாகியுள்ளது என அர்த்தம் என நகைச்சுவையுடன் கூறினார்.
கியூமோ முன்னதாக சில முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ள நிலையில், பொதுமக்கள் முன்னிலையில் தற்போது தான் முதல் முறையாக பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அறிகுறி இருப்பவர்கள் மட்டும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என இல்லை, வேலைக்கு திரும்புபவர்கள், மருத்துவ, சுகாதார பணியாளர்கள் மற்றும் வேலை காரணமாக பிறருடன் தொடர்புடையவர்கள், நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கியூமோ வலியுறுத்தினார்.
credit ns7.tv