திங்கள், 13 ஜூலை, 2020

ஆம்பூரில் இளைஞர் தீக்குளிப்பு: 5 போலீசார் இடமாற்றம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அண்ணா நகர் பகுதியில் முழு ஊரடங்கை மீறி வாகனத்தில் சென்றதால் முகிலன் என்னும் இளைஞரின் வாகனத்தை காவல்துறை பறிமுதல் செய்தனர். இதில், மனமுடைந்த அந்த வாலிபர் தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் ஜூலை 31ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இந்த மாதத்தில் வரும்  ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வு இல்லாத ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் முகிலன் என்பவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மருந்தகம் நோக்கி செல்லும் வழியில், வாகனை சோதனையில் ஈடுபட்டிருந்த  காவல்துறையினர் முகிலனை வழிமறைத்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

பணிக்கு செல்லும் தனது வாகனத்தை திருப்பி தருமாறு போலீசாரிடம் முகிலன் பலமுறை கேட்டுக் கொண்டார். ஆனால் போலீசார் தர முடியாது என்று மறுத்துவிட்டனர்.

 

 

ஒரு கட்டத்தில், மனமுடைந்த முகிலன் வாகனத்தை தரவில்லை எனில் தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொள்வதாகவும் எச்சரித்துள்ளார். போலீசார் வாகனத்தை தர முன்வராததால், தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்ட முகிலன் காவல் துறையினர் வாகன சோதனை நடத்திய இடத்திற்கு சென்று தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டார்.

தீக்காயங்களுடன் போராடி வந்த முகிலன் தற்போது  வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே  மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் சரக காவல்துறை டி.ஐ.ஜி. காமினி, திருப்பத்தூர் மாவட்ட காவல் சூப்பிரண்டன்ட் பொ. விஜயகுமார்  ஆகியோர்  சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டி.எஸ்.பி பிரவீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார். தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 5 போலீசார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Posts:

  • hadis நீண்ட பயணத்தில் ஒருவன் புறப்பட்டு, ஆடைகளும் உடம்பும் புழுதி படிந்த நிலையில், இறைவா! இறைவா! என்று பிரார்த்திக்கிறான். அவனது உடை, உணவு, பானம் ஆகியவை ஹ… Read More
  • 21/2 கோடி மிரட்டி நன்கொடையாக வாங்கி இதுயெல்லாம் அதிகம் மக்கள் மத்தில் கொண்டு செல்லவேண்டும். இவர்களிடம் இருந்துதான் தேர்தல் நேரத்தில் 21/2 கோடி மிரட்டி நன்கொடையாக வாங்கி … Read More
  • அமெரிக்காவில் தொடரும் மத துவேஷம்..!! ஹிஜாப்' அணிந்து முஸ்லிம்களுக்குஆதரவு தெரிவித்த கிருஸ்தவபேராசிரியை டாக்டர் 'லெரீஸியாஹாக்கின்' பணி இடைநீக்கம்..!அமெரிக்காவில் தொடரும் மத துவேஷம்..!!… Read More
  • கலப்பின கலப்பின மீன்களால் அழிந்து வரும் பாரம்பரிய நாட்டு மீன்கள்: ஆவணப்படுத்தும் பணியை தொடங்கியது ‘கயல்’ அமைப்பு … Read More
  • ஏர்டெல் மோசடி சற்று முன் ஒரு இந்திய கால் வந்ததுசரி யாரோ நன்பர் பேசுகிறார் என்று பேச முற்ப்பட்டால்நான் உங்கள் அன்பு சகோதரிஜெயலலிதா பேசுகிறேன் ( ஜெ குரல் தான்)சமீபத்… Read More