திங்கள், 13 ஜூலை, 2020

வைரஸ் என்றால் என்ன? - அறிவியல் ஆசிரியரின் விளக்கம்

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல வைரஸ் என்ற வார்த்தையானது, கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகள் போலவே பிற வைரஸ்களும் ஏற்படுத்தும் என்று முதுகெலும்புக்குக் கீழே ஒரு அதிர்ச்சியை நமக்கு உருவாக்குகிறது. அனைத்து வைரஸ்களும் மோசமானவையா? அவைபற்றி நாம் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

வைரஸ் என்ற வார்த்தை லத்தீன் வார்த்தையாகும். மெல்லிய திரவம் அல்லது விஷம் என்பதுதான் இதன் அர்த்தம். வைரஸ் தமது வாழ்க்கையாக கருதப்படும் எல்லைகளில்தான் ஆட்டம் காண்பிக்கின்றன. பொதுவாக அவை பாக்டீரியாக்களை விடவும்சிறியவை. இன்னொருபுறம் அவை எல்லா உயிரினங்களையும் உருவாக்கும் முக்கிய கூறுகளைக் கொண்டிருக்கின்றன; டிஎன்ஏ அல்லது ஆர்என்ஏ, நியூளிக் அமிலங்கள். இன்னொருபுறம் தொற்றும் உடம்பு தவிர்த்து பிற வெளி இடங்களில் வளரும் திறனோ அல்லது மறு உற்பத்தி செய்யவோ திறனற்று இருக்கின்றன. அது எந்த உயிரினமாகவும் இருக்கலாம். தொற்றுக்கு ஆளானவரின் செல்லின், செல்லுலார் இயக்கத்தை எடுத்துக் கொண்டு பணியாற்றுகின்றன. புதிய வைரஸ் துகள்களை வெளியிடுகின்றன. மேலும் செல்களைத் தொற்றுகின்றன. உடல் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

தொற்றுவோரின் உடம்பில் சுவாசப்பாதையில் நுழைகின்றன அல்லது திறந்த நிலையில் உள்ள புண்கள் மூலமும் செல்கின்றன. தொற்றும் உடம்பில் ஏதாவது ஒரு பூச்சி கடிக்கும்போது அந்த பூச்சியின் உமிழ் நீர்வழியாகவும் சில வைரஸ்கள் உடலுக்குள் போகும். மஞ்சள் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் ஆகியவை இது போன்ற வைரஸ் தொற்றுகளுக்கு உதாரணமாக கூறலாம். வெளவால்கள், பன்றிகள், ஒட்டகங்கள் மற்றும் பறவைகள் போன்ற பாலூட்டிகளின் மூலமும் மனிதரகளுக்கு தொற்றுகள் உண்டாகும். பாலூட்டிகள் மற்றும் பறவைகள் மட்டும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத 1.7 மில்லியன் வகை வைரஸ்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எபோலா மற்றும் சார்ஸ்(கடுமையான சுவாசநோய் அறிகுறிகள்) ஆகியவை மனிதர்களுக்கு வெளவால்கள் மூலம் கடத்தப்பட்டன, மெர்ஸ் (மத்திய கிழக்கு சுவாசநோய் அறிகுறிகள்) ஒட்டகம் வழியாகவும், எச்.ஐ.வி தொற்று சிம்பன்சி குரங்குகள் வழியாகவும் மனிதர்களுக்குக் கடத்தப்பட்டன என்பதற்கு சில உதாரணங்களாகும்.

முக்கியமாக, வைரஸ்கள் தொற்று ஏற்பட காரணம் ஆகின்றன. தொற்றுக்களின் பரவலான நிகழ்வுகள், மற்றும் மரணங்கள் 2014-ம் ஆண்டு மேற்கு ஆப்ரிக்காவில் தோன்றிய நோய்பரவலான எபோலா, 2009-ம் ஆண்டின் எச்1என்1, பன்றிகாய்ச்சல் உலகப் பெருந்தொற்று, இப்போது கோவிட்-19 என்பது போன்ற தொற்றுகள் இதற்கு வலு சேர்க்கின்றன. பெரும்பாலான வைரஸ்கள் உண்மையில் சிறிய அளவில் சளியை ஏற்படுத்துவது முதல் சார்ஸ் எனப்படும் கடுமையான சுவாச கோளாறுகள் வரை ஏற்படுத்தும். ஆனால், அனைத்து வைரஸ்களும் அபாயகரமானவை அல்ல. சில வைரஸ்கள், நம் உடலத்துக்கு கேடுவிளைவிக்கும் பாக்டீரியாவை கொல்ல உதவுகின்றன அல்லது மிகவும் அபாயகரமான வைரஸ்களுக்கு எதிராக போரிடவும் செய்கின்றன.

பாக்டீரியாபேஜ்கள் (அல்லது பேஜ்கள்) என்று அழைக்கப்படும் வைரஸ்கள் குறிப்பிட்ட பாக்டீரியாவை அழிக்கின்றன. இந்த வைரஸ்கள், மனிதனின் செரிமான, சுவாச மற்றும் இனப்பெருக்க பாதைகளில் சளி சவ்வு புறணியாக காணப்படும். இவைகள் இயற்கையிலேயே நம்மிடம் நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதியாக இருக்கின்றன.

பேஜ்கள் என்பவை ஒரு நூற்றாண்டாக வயிற்றுப்போக்கு, செப்சிஸ், சால்மோனெல்லா ஆகிய தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மற்றும் தோல் தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வைரஸ்கள் மூலப்பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன. குறிப்பாக உள்ளூர் நீர்நிலைகள், வடிகால் அல்லது தொற்றுக்கு உள்ளான மனிதர்களின் உடல் திரவங்கள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு சிகிச்சைக்காக உபயோகிக்கப்படுகின்றது. பேஜ்கள் மருந்துஎதிர்ப்பு தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தோராயமாக 1031 வகையான வைரஸ்கள் பூமியில் வாழ்கின்றன. உடல்நலக்குறைவில் இருந்து சுகம்பெறுவதற்கும் பெரும்பாலான நேரங்களில் நாம் இந்த வைரஸ்கள் நிறைந்த உலகில் வாழ பழகிவிட்டோம். கோவிட்-19 போன்ற பெருந்தொற்று நம்மை அச்சத்துக்கு உள்ளாக்கி நம்மை இந்த மனநிறைவில் இருந்து வெளியேற்றுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் தரப்படும் தொற்றுப்பரவல் குறித்த முன்னெச்சரிக்கையால் அதை தடுக்கமுடியும். விஞ்ஞானிகள் அதன் பண்புகளை ஆராய்ச்சி செய்கின்றனர். ஏன் சில வைரஸ்கள் மற்றவை போல இல்லை , மனிதர்களில் நுழைந்து தொற்று ஏற்படுத்துகின்றன என்பது குறித்து அவர்கள் விவரிக்க வேண்டும்.

வைரஸ் கூறு பற்றிய புரிதலில் மிகவும் ஆரம்பகட்டத்தில் நாம் இருக்கின்றோம். வைரஸ்கள் குறித்த இந்த ஆய்வு அல்லது ஆராய்ச்சி வைரஸ் தொற்றுகளைப் புரிந்து கொள்வதற்கு பெரும் அளவுக்கு நமக்கு உதவி செய்வதாக இருக்கும். முக்கியமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றுக்கு எதிராக எப்படி போராடுவது என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

கட்டுரையின் எழுத்தாளர், சிவ் நாடார் பள்ளியின் அறிவியல் மற்றும் கணிதப் பாடத்திட்டத்துக்கான தலைவராக இருக்கிறார்.