கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஞாயிற்றுகிழமையான இன்று தமிழகம் முழுவதும் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று எந்தவிதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 103 சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு காவல் துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.