புதன், 15 ஜூலை, 2020

ராமர் நேபாளத்தைச் சேர்ந்தவர் – நேபாள பிரதமர் கே.பி.O

வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்த பானுபக்த ஆச்சார்யா பிறந்த 206வது ஆண்டு விழாவை முன்னிட்டு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.ஒலி, ராமர் உண்மையில் இன்றைய நேபாளத்தில் இருந்து வந்தவர் என்று கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நேபாள பிரதமர் கே.பி.ஒலி, இந்தியா உத்தரபிரதேசத்தின் பைசாபாத்தில் உள்ள அயோத்தியில் அவருடைய ராஜ்யத்தை உருவாக்கியதன் மூலம் ராமருக்கு உரிய உண்மைகளை சிதைத்துவிட்டது என்றும் ராமர் உண்மையில் இன்றைய நேபாளத்தில் ஒரு இடத்தில் இருந்து வந்ததாகவும் திங்கள்கிழமை கூறினார்.

நேபாளத்தில் வால்மீகி ராமாயணத்தை மொழிபெயர்த்த நேபாள கவிஞர் பானுபக்த ஆச்சார்யாவின் 206 வது பிறந்தநாளை முன்னிட்டு, ஒரு நிகழ்ச்சியில் பேசிய நேபாள பிரதமர் கே.பி.ஒலி, அயோத்தி பீகார் எல்லையில் உள்ள பிர்கஞ்சிற்கு மேற்கே உள்ள ஒரு பகுதி என்று கூறினார்.

ராமர் தனது திருமணத்திற்காக இன்றைய அயோத்தி முதல் நேபாளம் வரை வருவதற்கான சாத்தியம் இல்லை, கே.பி.ஒலி கூறினார்.

“இந்தியா உண்மைகளை சிதைத்துள்ளதால் நாங்கள் கலாச்சார ரீதியாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம். சீதை ஒரு இந்திய இளவரசனுக்கு திருமணத்தில் கொடுக்கப்படவில்லை” என்று கூறினார். உத்தரப்பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தில் உள்ள அயோத்தி என்பது இந்தியாவின் பிற்கால உருவாக்கம். அது உண்மையான பண்டைய இராச்சியம் அல்ல என்று கே.பி.ஒலி வலியுறுத்தினார்.

சீதையைப் போலவே இன்றைய நேபாளத்திலிருந்து ராமரும் வந்தார் என்று நேபாள பிரதமர் கூறினார். ராமரின் ராஜ்ஜியம் இருந்தது, பீகார் எல்லையில் தோரிக்கு நெருக்கமான ஒரு இடம் என்று அவர் கூறினார்.

சீதை ராமனால் கைவிடப்பட்ட பின்னர், வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் அவருடைய மகன்கள் லவ மற்றும் குஷா ஆகியோருடன் தற்போதைய பீகார் நேபாள எல்லையில் நாராயணி (கந்தக் நதி) கரையில் வசித்து வந்ததாக புராணக்கதை கூறுகிறது. இந்த இடம் இன்றும் ஏராளமான யாத்ரீகர்களை ஈர்க்கிறது.

தசரத மன்னருக்காக ‘புத்ரஸ்டி யாகம்’ செய்த பண்டிதர்கள் நேபாளத்தின் ரிடி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கே.பி.ஒலி கூறினார்.

ராமர் நேபாளத்தில் இருந்து வந்தவர் என்று நேபாளர் பிரதமர் கே.பி.ஒலி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒலியின் கருத்து குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன.

KP Sharma Oli - Wikipedia