சனி, 18 ஜூலை, 2020

ஸ்மூத்தி (Smoothie)


வாழைப்பழ, ஆரஞ்சு ஸ்மூத்தி:

ஆரஞ்சு சாறு, தயிர், இலவங்கப்பட்டை, இஞ்சி, வாழைப்பழம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கட்டியில்லாமல் நன்றாக அரைத்த பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறவும். தேவைப்பட்டால் அதனை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று எடுத்துக் குடிக்கலாம். 

பயன்கள்:
ஆரஞ்சில் இருந்து உங்களுக்கு வைட்டமின் C சத்து தேவையான அளவு கிடைக்கும். இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. வாழைப்பழம் மூலம் உங்கள் உடலுக்கு பொட்டாசியம் சத்து கிடைக்கும்.


கிரீன் ஸ்மூத்தி: 

பலருக்கும் கீரை சாப்பிட பிடிக்காது. ஆனால் அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதனால் அதனை இப்படி வித்தியாசமாக சுவையாக சாப்பிட்டால் நீங்கள் வேண்டாம் என சொல்ல மாட்டீர்கள். கீரை, மாம்பழம் அல்லது அன்னாசி பழம், எலுமிச்சை சாறு, இஞ்சி, பாதாம் பால் அல்லது தயிர் அனைத்தையும் ஒன்றாக கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். அதன்பிறகு அதனை குளிர வைத்து பரிமாறுங்கள்.

பயன்கள்:

கீரையில் வைட்டமின் c மற்றும் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிக அளவில் உள்ளன. இதில் உள்ள கால்சியம், ஃபைபர் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். எலுமிச்சை சாறு உங்களுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். மேலும் அதில் உள்ள வைட்டமின் சி உங்கள் உடலுக்கும் நன்மை பயக்கும்.பழங்கள் உங்களுக்கு இயற்கையான ஒரு இனிப்பு சுவையை கொடுக்கும்.