பெங்களூர் அருகே இரயில் முன்னே நின்று செல்ஃபி எடுத்த 3 இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் ராம்நகர் அடுத்த பிதாதி என்னும் பகுதியில் தண்டவாளத்தில் நின்று கொண்டு ரயில் வரும்போது 3 இளைஞர்கள் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். அப்போது அவர்கள் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் 3 இளைஞர்களும் உடல் சிதைந்து பலியாகினர்.
ரயில் பின்னால் வருவது போல் செல்ஃபி எடுக்க முயற்சி செய்த இளைஞர்கள் ரயில் எவ்வளவு அருகில் வருகிறது என்பதை கவனிக்காமல் இருந்து உள்ளனர் என கூறப்படுகிறது.
சடலங்கள் அடையாளம் காண முடியாத வகையில் மிகவும் சிதைந்துவிட்டது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிதாதி பகுதி போலீசாரும், ரயில்வே போலீசாரும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ‘செல்பி’ மோகத்தினால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டாலும், உயிரிழப்பு தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் கவலைக்குரியதாகி வருகிறது.
பெங்களூரு அருகே சமீபத்தில் குளத்தில் குளிக்க சென்றபோது நண்பன் நீரில் மூழ்குவதை அறியாமல் பிற நண்பர்கள் செல்ஃபி படமெடுத்த விபரீதம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.