புதன், 1 நவம்பர், 2017

மழை காலங்களில் மக்கள் என்ன செய்ய வேண்டும்? Nov 1 2017

தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை வெள்ள காலங்களில் மக்கள் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

மின்தடை ஏற்படும் போது குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இயங்காது என்பதால், பாத்திரங்களில் குடிநீரை சேகரிக்கவும்.

மின்தடை ஏற்பட்டால் பயன்படுத்தும் வகையில் மெழுகுவர்த்தி, டார்ச் போன்ற பொருட்களை தயார்படுத்திக் கொள்ளவும்.

Laptop, Power Bank போன்ற மின்சாதனப் பொருட்களை முழுமையாக Charge செய்து கொள்ளவும்.

மின் இணைப்பு உள்ள பகுதியில் மழைநீர் புகாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

பால் விநியோகம் தடைபட்டால் பயன்படுத்துவதற்கு ஏதுவாக பால் பவுடர் போன்ற பொருட்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.

வெள்ள பாதிப்பு ஏற்படும் காலத்தில் பயன்படுத்த பிஸ்கட், உலர் பழங்கள் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் இருக்கும் வாகனங்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தலாம்.

மழை நீரால் சூழப்பட்ட சாலைகளில் வாகனங்களில் செல்வதை முடிந்த வரை தவிர்க்கலாம்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடந்து செல்லும் குழிகள், பள்ளங்கள் உள்ளதா என்பதை கண்டறிய நீளமான குச்சியை பயன்படுத்தலாம்.