வியாழன், 31 ஜனவரி, 2019

யானைப்படை


தமிழகத்தில் முதன்முறையாக ரோபோ லேப் மாநகராட்சிப் பள்ளியில் அறிமுகம்! January 31, 2019

Image
தமிழகத்தில் முதன்முறையாக மாநகராட்சி பள்ளியில் ஸ்டெம் (STEM) கல்வி முறையில் ரோபோ ஆய்வகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் மாணவர்களின் அறிவியல் ஆற்றல் என்பது வயது வித்தியாசமின்றி வெவ்வேறுவிதமாக வெளிப்பட்டு வருகிறது.  வளர்ந்துவரும் உலக நாடுகளுக்கு இணையாக தமிழக மாணவர்கள் தங்களது திறமைகளை மேம்படுத்தும் வகையில், இந்திய - அமெரிக்க ஒருங்கிணைப்பு தனியார் நிறுவனம் ஒன்றோடு ரோபா ஆய்வகத்தை மதுரை மாநகராட்சி முதல் முறையாக தொடங்கியுள்ளது. 
தமிழகத்தில் முதன்முறையாக ஸ்டெம் கல்வி முறையில் 13.5 லட்சம் ரூபாய் மதிப்பில் தத்தனேரி திருவிக பள்ளியில் இந்த ஆய்வகம், தொடங்கப்பட்டுள்ளது. 
இந்த ரோபோ ஆய்வகம் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்டவைகள் குறித்த கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த ரோபோக்கள் அனைத்திற்கும் மாணவர்கள் தாங்களாகவே புரோகிராம்களை உருவாக்குதுடன், அதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து பயன்படுத்துகின்றனர்.
பல்வேறு நாடுகளில் வயது வித்தியாசமின்றி மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் மேற்கொள்ளப்படும் இந்த புதிய முயற்சி அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. மாணவர்களின் கணிணி அறிவியலை மேம்படுத்தும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது. 
 
தற்போது தொழில்துறையில் ரோபோக்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக இருந்த இந்த பயிற்சியை அரசு இலவசமாக கற்றுத் தருவது மாணவர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ns7.tv

சென்னையில் மட்டும் 87.39 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்! January 31, 2019

பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்த ஜனவரி 1 முதல் இன்று வரை சென்னை மாநகராட்சியில் 87.39 மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. 
 
கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. 14 வகையான பிளாஸ்டிக்குகளை தடை செய்த தமிழக அரசு, அதற்கு மாற்றாக 12 வகையான பொருட்களை பயன்படுத்த தமிழக மக்களை அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பொது சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் 15 மண்டலங்களிலும் பிளாஸ்டிக் சோதனை 
நடைபெற்றது. இதில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 30ம் தேதி வரை 87.39 மெட்ரிக் டன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி  தகவல் தெரிவித்திருக்கிறது

source: ns7.tv

புதன், 30 ஜனவரி, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது! January 30, 2019

Image
திருவாரூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசலை மையமாக கொண்டு கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாள்தோறும் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் திருக்கரவாசலில் நடைபெற்ற விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்தில்  ஜனவரி 27 முதல் காத்திருப்பு போராட்டம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் வரை நடைபெறும் என போராட்ட குழு அறிவித்து அன்று முதல் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் விவசாயிகள் பிரதமர் மோடியிடம் தங்கள் பகுதியை விட்டு விடுமாறு கை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் இன்று அதிகாலையில் 12 விவசாயிகளை கைது செய்து கூடூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

 
கைது செய்யப்பட்ட விவசாயிகளை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து செய்தியாளா்களிடம் பேசியபோது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளை நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் எனவே தான் விவசாயிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

மேலும் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என தெரிவித்தார்.

சொன்னதை செய்த தமிழக அரசு! January 30, 2019

Image
ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தத்தால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அந்த நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. 
இந்நிலையில், வழக்கமாக 31ஆம் தேதி வழங்கப்பட வேண்டிய ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மட்டுமின்றி அனைத்து ஊழியர்களின் ஊதியமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் ஊதியம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. 

source ns7.tv

அரியர் எழுதுவதில் மாற்றம்: பின்வாங்கியது அண்ணா பல்கலைக்கழகம் January 30, 2019

Image
அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவர்கள் அரியர் தேர்வெழுத விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், புதிய தேர்வு முறைப்படி முதல் பருவத்தில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால், அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது என தெரிவிக்கப்பட்டது. 2017 ஒழுங்குமுறைப்படி  அரியர் தேர்வு எழுத அதற்கு அடுத்த ஆண்டே வாய்ப்பு  தரப்படும் என்ற விவகாரம் மாணவர்களின் கல்வி நலனை பாதிப்பதாக கூறி வந்ததோடு, இந்த புதிய நடைமுறையை எதிர்த்து கடந்த ஜனவரி 18ம் தேதி மாணவர்கள் போராட்டமும் நடத்தினர்.
மாணவர்கள் போராட்டத்தையடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தகூட்டத்தில் அரியர் தேர்வெழுத விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. வரும் 6ம் தேதி நடைபெறும் சிண்டிகேட் குழு கூட்டத்தில் தடை நீக்கத்திற்கான அனுமதி வழங்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் குமார் அறிவித்துள்ளார்.

source: ns7.tv

பன்றிக்காய்ச்சல்: மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி புள்ளி விவரம்! January 30, 2019

Image
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு இந்த மாதத்தில் மட்டும் இதுவரை 169 வரை உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அறிக்கையில், பன்றிக்காய்ச்சலால் இதுவரை 4,571 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு இதுவரை பன்றி காய்ச்சலுக்கு 75 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக குஜராத்தில் 24 பேரும், பஞ்சாப்பில் 27 பேரும், மகாராஷ்ட்ராவில் 12 பேரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 1,103 பேர் உயிரிழந்ததாகவும், 14,992 பேர் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பன்றிக் கயாச்சல் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

source: ns7.tv

செவ்வாய், 29 ஜனவரி, 2019

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம்! January 29, 2019

Image
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் அருகே பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் ஊராட்சியை மையமாக கொண்டு ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.  இதற்கு எதிர்ப்பு போராட்டங்களின் தொடர்ச்சியாக திருக்காரவாசல் கடைவீதியில் நேற்று முன் தினம் முதல் கிராம மக்கள் மத்திய அரசிற்கு கண்டனம் தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தொடங்கியது. இந்த காத்திருப்பு போராட்டத்தில் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி பங்கேற்றார். போராட்டத்தின் போது பெண்கள் ஓப்பாரி வைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய  தமிமுன் அன்சாரி  ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதிக்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றார்.
source: Ns7.tv

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் ஒழிந்துவிட்டதா? : சீமான் கேள்வி January 29, 2019

Image
பல மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜக, அங்கெல்லாம் ஊழலை ஒழித்து விட்டதா என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் அமைக்கப்படும், 8 வழிசாலை, 10 வழி சாலைகள் அனைத்தும் முதலாளிகளுக்கானது என்றும், அவை மக்களுக்கானது அல்ல என்றும் கூறினார். 
கார், செல்போன் போன்றவற்றை கொடுக்க திட்டம் வைத்திருக்கும் இந்தியாவில், விவசாயிகளைப் பற்றிய சிந்தனைகள் கிடையாது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். 
source: ns7.tv

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியதாக பள்ளி கல்வித்துறை தகவல்! January 29, 2019

Image
வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு விதித்த கெடு முடிவடைந்த நிலையில், 97 சதவீத உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 7 நாட்களாக அரசுப்பள்ளி ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் இன்று காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்தது.
அரசு விதித்த கெடு முடிவடைந்த நிலையில், 76 சதவீத தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு திரும்பிய இடைநிலை ஆசிரியர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

source: ns7.tv

இஜிதிமாவில் கலந்து காெள்வதில் நன்மை ஏதும் கிடைக்குமா?

அல்லாஹ்வின் வார்த்தைக்கு கட்டுப்பட மாட்டாேம் எங்கள் மவ்ளவிகள்
சாெல்வது தான் மார்க்கம்...
கடந்த சில தினங்களாக பல பள்ளிவாசல்களில் தாெழுகையில் மக்கள் கூட்டம் இவ்வளவு தான் இருக்கிறது..... காரணம் இஜிதிமா....
اُدْعُوْا رَبَّكُمْ تَضَرُّعًا وَّخُفْيَةً‌ اِنَّهٗ لَا يُحِبُّ الْمُعْتَدِيْنَ‌ ‏
(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 7:55)
وَاذْكُرْ رَّبَّكَ فِىْ نَفْسِكَ تَضَرُّعًا وَّخِيْفَةً وَّدُوْنَ الْجَـهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْاٰصَالِ وَلَا تَكُنْ مِّنَ الْغٰفِلِيْنَ‏
(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
(அல்குர்ஆன் : 7:205)
பணிவாகவும் , அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் வரம்பு மீறாதீர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்தும் அந்த எச்சரிக்கையை மீறி பகிரங்கமாக கூட்டுத்துஆ
கேட்கிறார்கள் என்றால் இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் ஏற்படுமா? ஏற்ப்படாதா? என்பதை முஸ்லிம்களே சிந்தியுங்கள்....
இஜிதிமாவில் முஸ்லிம்கள் கலந்து காெள்வதின் நாேக்கம் கூட்டுத்துஆவில் கலந்து காெள்வதுதான். அந்த கூட்டுத்துஆவே இஸ்லாத்திற்கு எதிரானது என்றால் இஜிதிமாவில் கலந்து காெள்வதில் நன்மை ஏதும்
கிடைக்குமா? அல்லது அல்லாஹ்வின் வார்த்தையை மீறியதற்காக அல்லாஹ்வின் சாபம் ஏற்ப்படுமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்....
அல்லாஹ்வின் பள்ளிகள் தாெழுகைக்கு ஆள்கள் இன்றி வெறிச்சாேடி கிடக்கிறது. ஆனால் வழிகெட்ட செயலுக்காக கூட்டம் அலை மாேதுகிறது.
சிந்தியுங்கள்....
அபுகனிபா_புளியங்குடி
ஜமாஅத்துல் முஸ்லிமீன்.

Source: FB Abuhanifa M

அரசு தீவிர நடவடிக்கை


திங்கள், 28 ஜனவரி, 2019

ஜிஎஸ்டி வரி குறைப்பு திமுகவின் தேர்தல் அறிக்கையாக கொண்டுவரப்படும் - தயாநிதிமாறன் January 28, 2019

Image
ஜிஎஸ்டி வரி குறைப்பு  திமுகவின் தேர்தல் அறிக்கையாக கொண்டுவரப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணியில் வியாபாரிகள் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நக்கீரன் கோபால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில், விக்கிரமராஜா பேசும்போது, பிரதமர் மோடி மீது வைத்த நம்பிக்கை வீண் போனது என்று வருத்தம் தெரிவித்த அவர், அவசர அவசரமாக ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும், மத்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டிய விக்கிரமராஜா, உணவு தர நிர்ணய சட்டத்தால் வணிகர்கள் பாதிக்கப்படுள்ளதாக தெரிவித்தார். மேலும், பிளாஸ்டிக் பொருட்கள் தடை விவகாரத்தில் தடை செய்யப்படாத பொருட்களையும் அதிகாரிகள் வணிகர்களிடமிருந்து பறிமுதல் செய்து வருகின்றனர் என்று அவர் வேதனை தெரிவித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேசும்போது, வாய்ப்பளித்தால் மீண்டும் நல்லாட்சி கொண்டு வரப்படும் என்கிறார் பிரதமர் மோடி. கடந்த 4 ஆண்டுகள் என்ன ஆட்சி கொடுத்தார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பிய அவர், ஜிஎஸ்டி வரி குறைப்பு தேர்தல் அறிக்கையாக கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/28/1/2019/gst-tax-reduction-will-be-there-dmk-election-manifesto-said-former

ஜாக்டோ-ஜியோ அமைப்பு வலியுறுத்தும் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்! January 28, 2019

source :http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-newsslider/28/1/2019/jacto-geo-9-feature-requests


Image
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர். 21.01-2019ம் தேதியிட்ட கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் 9 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்த அமைப்பினர் வழங்கினர். அந்த மனுவில் குறிப்பிடப்படிருந்த 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தான், உயர்நீதிமன்றம் மற்றும் தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்,

9 அம்ச கோரிக்கைகள்:

1)01-004-2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைபடுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
2) இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டுவரும் அநீதி களையப்பட வேண்டும்.
3)முதுநிலை ஆசிரியர்கள் அனைத்து ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக, களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும்.
4)சிறப்புக் காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் பலநோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
5)21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்கிட வேண்டும்.
6) 2003, 2004 மற்றும் பல்வேறு காலகட்டங்களில் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைபடுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
7)அரசாணை எண் 56ல் இளைஞர்களின் வேலை வாய்ப்பினைப் பறிக்கின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை இரத்து செய்ய வேண்டும். மேலும், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணை எண்கள் 100 மற்றும் 101 ஆகியவற்றை இரத்து செய்ய வேண்டும். 5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாகக் கைவிட்டு, சமூக நீதியினைப் பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் முடிவினையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்.
9) அங்கன்வாடி மையங்களில் LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தான் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் போராடி வருகின்றனர். அரசுப்பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்றே கடைசி நாள் என்று அரசு கெடு விதித்துள்ள நிலையில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் முடிவு என்ன என்பது இன்று தெரியவரும்.

தென் மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிவு! January 28, 2019

Image
தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 800 என்ற அளவில் சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பதிவுத்துறை சேகரித்த தகவலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவிலேயே ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆந்திராவில், 974 ஆக இருந்த பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 2016-ம் ஆண்டு 806 ஆக உள்ளது. கர்நாடகாவில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் ஆயிரத்து நான்காக இருந்த நிலையில். 2016ம் ஆண்டு 896 ஆக சரிந்துள்ளது. 

தமிழகத்தை பொறுத்தவரையில், 2007ம் ஆண்டு 935 ஆக இருந்த பெண் குழந்தை பிறப்பு விகிதம் 840 ஆக உள்ளது. ஒடிசாவில் 858 ஆகவும், உத்தரகாண்டில் 869 ஆகவும் உள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே, ஆந்திரா மற்றும் ராஜஸ்தானில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம், 800 ஆக குறைந்து மோசமான நிலையை எட்டியுள்ளது. கேரளா மற்றும் சத்தீஸ்கரில் அதிக பெண் குழந்தைகள் பிறப்பதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://ns7.tv/ta/tamil-news/india-important/28/1/2019/girl-child-birth-rate-lowered-south-india

பென்குயின்கள் அழியாமல் பாதுகாக்க உயிரணுக்களை சேகரித்து வைக்கும் வங்கி! January 27, 2019

Image
அருகி வரும் பென்குயின் இனமான ஆப்ரிக்க பென்குயின்களின், உயிரணுக்களை சேகரித்து வைக்கும் வங்கி, தென்ஆப்ரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. 
ஆப்பிரிக்காவில் இந்த வகை பென்குயின்கள் மிகவும் குறைவாக இருப்பதால், அடுத்த 10 ஆண்டுகளில், இவை அழியும் ஆபத்து உள்ளதாக, உயிரின ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அழிவில் இருந்து ஆப்ரிக்க பென்குயின்களைக் காக்கும் நோக்கில், அவற்றின் உயிரணுக்களை சேகரிக்கும் வங்கி அங்கு தொடங்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம், இந்த இனம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது எந்த வகையில் ஒரு இனத்தின் அழிவைத் தடுக்கும் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது வெற்றியடையும் பட்சத்தில் பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகாமல் தடுக்க முடியும் உயிரியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

http://ns7.tv/ta/tamil-news/world-editors-pick-newsslider/27/1/2019/bank-collects-cells-save-penguins

உதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜாக்கள்! January 28, 2019

Authors
Image
உதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. 
மலைகளின் அரசி என்றழைக்கபடும் நீலகிரியில் பனியின் தாக்கம் குறைந்து, தற்போது இதமான காலநிலை நிலவுவதால் வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், அதிகளவில் வருகை புரிகின்றனர். உதகையில் இடம்பெற்றுள்ள ரோஜா பூங்காவை பார்வையிடும் சுற்றுலா பயணிகள், சிவப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட பலவண்ண ரோஜா மலர்களை ஒரே இடத்தில் கண்டு பரவசம் அடைகின்றனர். ரோஜா மலர்கள்  பூத்துகுலுங்கும் காட்சியை ஆர்வமுடன் பார்வையிடும்  பயணிகள், அவற்றுடன் செல்பி எடுத்து செல்கின்றனர். குறிப்பாக  இப்பூங்காவில் இடம்பெற்றுள்ள பச்சை நிற ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. 
source: http://ns7.tv/ta/tamil-news/tamilnadu-editors-pick/28/1/2019/green-roses-are-attracting-tourists-ooty

ஞாயிறு, 27 ஜனவரி, 2019

பாஜக ஆட்சியில் இருக்கும் வரை 7 பேர் விடுதலை கிடையாது: சுப்பிரமணியன் சுவாமி January 27, 2019

Image

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை, வெளியில் வர முடியாது என, அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். 
காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து பேசிய அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  ராஜீவ்காந்தி கொலை விவகாரம் சாதாரண விஷயமாக கருத முடியாது என குறிப்பிட்ட அவர், பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை, இந்த வழக்கின் தண்டனை குற்றவாளிகள் யாரும் வெளியில் வரமுடியாது என்றார்.
இதனிடையே, எழுவரை விடுதலை செய்யக்கோரி, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் 139 நாட்களை கடந்த பின்னரும், ஆளுநர் கையொப்பம் இட மறுப்பது ஏன் என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கேள்வி எழுப்பினார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பதவியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்திட வேண்டும் என வலியுறுத்தினார். 
source: http://www.ns7.tv/ta/tamil-news/india/27/1/2019/subramanian-swamy-said-about-rajiv-gandhi-assassination-case-victims

லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கும் 15 ‘ஆப்’கள்! January 24, 2019

Image
ப்ளே ஸ்டோரில் உள்ள 15 ‘ஆப்’கள் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன்களை இயக்க இயங்குதளம் முக்கியமான பங்கு வகித்து வருகிறது. இதில் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் மிகவும் பிரபலமானவை. உபயோகிக்க எளிதாக உள்ள, கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்படும் இந்த இயங்குதளத்தில் போதுமான பாதுகாப்பு வசதி இல்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதனிடையே கூகுள் நிறுவனம் ‘ஆப்’கள் சந்தை எனப்படும் ப்ளே ஸ்டோரில் உள்ள போலி செயலிகள், பாதிப்பு ஏற்படுத்தகூடிய மென்பொருகளை களையெடுத்து வருகிறது. 

இதில் முதற்கட்டமாக மக்களை ஏமாற்றி வசூல் செய்து வரும் 15 ஜி.பி.எஸ் ‘ஆப்’களை கண்டறிந்து வெளியிட்டுள்ளது. இதனை 5 கோடி பயனாளிகள் தரவிறக்கம் செய்ததுள்ளதாக கூகுள் நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த 15 ஆப்களும் போக்குவரத்துக்கு வழி சொல்லக்கூடிய ஜி.பி.எஸ் ‘ஆப்’கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமை எதுவுமின்றி வெறும் கூகுள் நிறுவனத்தின் மேப் நேவிகேஷனை பயன்படுத்தி அதில் விளம்பரங்களை வெளியிட்டு அதன் மூலம் வருவாய் ஈட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் விளம்பரங்கள் வரமால் இருப்பதற்காக பயனாளிகளிடமே வசூல் செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த வகை ‘ஆப்’களை உடனே தங்களது ஸ்மார்ட் போனில் இருந்து அகற்ற கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
மக்களை முட்டாளாக்கும் அந்த 15 ஜி.பி.எஸ் ‘ஆப்’கள் இவைதான்..
1➤ Voice GPS direction
2➤ GPS Route Finder
3➤ GPS Route Tracker
4➤ GPS Maps & Navigation
5➤ Maps GPS Navigation
6➤ Live Earth Map
7➤ Live Earth Map & Satellite
8➤ Traffic updates: GPS free maps
9➤ Free GPS, Maps & Navigation
10➤ GPS Satellite maps
11➤ Free GPS Maps- Star Play Creations
12➤ GPS Street View- Maps Go
13➤ Voice GPS Driving- Delta raza apps
14➤ GPS Live Street Maps
15➤ Free GPS Traffic updates

source http://www.ns7.tv/ta/tamil-news/technology-important-editors-pick/24/1/2019/15-apps-have-fooled-millions-android

ஆண்ட்ராய்டை கை விடுகிறதா கூகிள்? January 25, 2019

Authors
Image
ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் இயங்குதளங்களுக்கு மாற்றாக புதிய இயங்குதளம் ஒன்றை கூகிள் நிறுவனம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் தங்களது அடுத்த அறிவிப்புகளை வெளியிடும் கூகிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எந்த அறிவிப்பும் வெளியிடாமல் அமைதி காத்து வந்தது. ஆண்ட்ராய்ட் இயங்கு தளம் வெளியாகி 11 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டுக்கு மாற்றாக “Fuchsia” என்னும் புதிய இயங்குதளம் ஒன்றை கடந்த மூன்று ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்து அமைதிக்கான பின்னணியை உடைத்திருக்கிறது கூகிள்.
இந்த புதிய இயங்குதளமானது கூகிளின் தற்போதைய இயங்குதளங்களான ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகியவற்றிற்கு மாற்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும், இது ஸ்மார்ட் போன், லேப்டாப், ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பலவற்றில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த இயங்குதளமானது முதலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் படிப்படியாக மொபைல் போன் மற்றும் டேப்லட் உள்ளிட்டவற்றிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இந்த பணிக்காக ஆப்பிள் நிறுவனத்தில் கடந்த 2004ம் ஆண்டு முதல் பணிபுரிந்து வரும் பில் ஸ்டிவன்சனை பணிக்கு அமர்த்தியுள்ளது. வரும் பிப்ரவரி மாதம் கூகிளில் இணையும் ஸ்டீவன்சன் “Fuchsia” உருவாக்கத்தில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது.
Google Fuschia Operating system

பில் ஸ்டீவன்சன், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளமான OS X ன் release engineer ஆக பணியாற்றியுள்ளதோடு, மற்ற இயங்கு தளங்களான லயன் முதல் மோஜாவே வரையிலான உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். 
இந்த, புதிய இயங்குதளம் பயன்பாட்டுக்கு வர இன்னும் மூன்று வருடங்களுக்கு மேல் ஆகும் என்றும், ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்புகளுக்கு அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு மாற்றாக இந்த புதிய இயங்குதளத்தை வெளியிடும் வேலைகளில் கூகிள் நிறுவனம் ஏற்கனவே இறங்கிவிட்டதாகவும், ஆண்ட்ராய்ட் போனில் நாம் தற்போது பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆப்கள் Fuchsia” விலும் இயங்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
“Fuchsia” என்பது அமெரிக்கா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் காணப்படும் ஒருவகை தாவரமாகும். இதில் மலரும் பூக்கள் பர்ப்பிள் மற்றும் சிவப்பு நிறம் என இரு நிறங்களை கொண்டிருக்கும். ஆண்ட்ராய்ட் மற்றும் க்ரோம் ஆகிய இயங்குதளங்களுக்கு மாற்றாக ஒரே இயங்குதளம் வெளியாக இருப்பதால் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறுகிறார்கள் டெக் வல்லுநர்கள்.

http://www.ns7.tv/ta/tamil-news/technology/25/1/2019/google-will-introduce-new-operating-system-named-fuchsia

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 72 ஆசிரியர்கள் சிறையில் அடைப்பு! January 26, 2019

Image
நாமக்கல்லில் ஜாக்டோ ஜியோ நடத்திய சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 72 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
நாமக்கலில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த 72 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.  இதையடுத்து சாலை மறியலை முன் நின்று நடத்திய அந்த 72 ஆசிரியர்கள், தங்களை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  9 மணி நேரமாக அவர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு பிப்ரவரி 1ந்தேதி வரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருதுநகரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வீடு திரும்ப மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது  செய்யப்பட்டு மண்டபத்தில் காவல் வைக்கப்பட்டனர். இந்நிலையில் ஒரு சில நிர்வாகிகளை மட்டும் காவல்துறையினர் விடுவிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கைது செய்யப்பட்ட மற்றவர்களும் வெளியே செல்ல மறுத்ததால் காவல் துறையினர் மின் இணைப்புத் துண்டித்தனர். இதனால் பெண் நிர்வாகிகள் கடும் அவதியடைந்தனர்
சங்கரன் கோவிலில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்ட மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிர்வாகிகள் சிறை வைக்கப்பட்டிருந்த மண்டபத்துக்கு வெளியே திமுக மற்றும் சி.பி.எம். கட்சியினர் கூடினர். அப்போது சி.பி.எம். வட்டார செயலாளர் அசோக் ராஜுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதைத் தொடர்ந்து காவல்துறையால் அவர் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டார் 
source: http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu-important/26/1/2019/jacto-geo-protest-72-teachers-arrested-namakkal

முற்றிலும் அழிந்ததாக நினைக்கப்பட்ட தட்டைச் சுறா மீண்டும் கண்டுபிடிப்பு! January 26, 2019


Image
முற்றிலும் அழிந்துபோனதாக கூறப்பட்ட ஏஞ்சல் ஷார்க் எனப்படும் தட்டைச் சுறா பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
ஆழ்கடலில் கடல் மணலில் பதுங்கியிருந்து வேட்டையாடும் தன்மை கொண்ட தட்டை சுறா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் நினைத்துவந்தார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான கேனரி தீவுப் பகுதியில் வித்தியாசமான சுறா ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதை ஆய்வு செய்ததில் அழிந்துவிட்டதாக கருதப்பட்ட தட்டை சுறா என்பது தெரியவந்தது. 
வரைமுறையற்ற வேட்டைகளால் இந்தச் சுறாவை கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து காணமுடியவில்லை என்பதால் அழிந்து விட்டதாக கருதப்பட்ட நிலையில், மீண்டும் தட்டை சுறா தென்பட்டுள்ளதால் கடல் ஆராய்சியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  
 
source: http://www.ns7.tv/ta/tamil-news/world-important/26/1/2019/rare-angel-sharks-found-living-coast-wales

நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுமா? January 26, 2019

Image
குஜராத் அரசு பப்ஜி விளையாட்டிற்கு தடை செய்த சம்பவம், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்படுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. 
செல்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோர், அதில் உள்ள ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகிவிட்டனர். இந்நிலையில், கடந்த சில காலமாக பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட்டு, பெரும்பாலான மாணவர்களை அடிமையாக்கிவைத்துள்ளது. பப்ஜி விளையாட்டிற்கு பல நிறுவனங்களும் தடை விதித்துள்ளது. 
இதனை அடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு கேஷ்மீரை சேர்ந்த மாணவர்கள் சிலர், தேர்வில் தொடர்ந்து குறைந்த மதிப்பெண்கள் எடுத்துவரக்காரணம் பப்ஜி விளையாட்டுதான் என தெரிவித்து, பப்ஜி விளையாட்டிற்கு தடை விதிக்குமாறு ஜம்மு கேஷ்மீர் அரசிற்கு மனு அளித்தனர். இதனை கேள்விப்பட்ட குஜராத் அரசாங்கம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலம் முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்துள்ளது. மேலும், பள்ளிகளில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
இதுமட்டுமல்லாமல், குழந்தை உரிமைகளை பாதுகாக்கும் தேசிய கமிஷனிடம், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்து, இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், நாடு முழுவதும் பப்ஜி விளையாட்டை தடை செய்யமுடியுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

source: www.ns7.tv/ta/tamil-news/india-technology-editors-pick/26/1/2019/will-pubg-game-banned-around-country

எத்தனை முறை தமிழகம் வந்தார் பிரதமர் ? January 27, 2019

பிரதமராக பதவியேற்ற பிறகு தமிழகத்திற்கு எப்போதெல்லாம் நரேந்திர மோடி வருகை புரிந்தார் என்பது குறித்த விவரங்கள்..!
ஆகஸ்ட், 2015 - சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் கைத்தறி நெசவாளர்கள் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் அப்போதைய முதலமைச்சர்  ஜெயலலிதாவை போயஸ் தோட்ட இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
டிசம்பர்  2015  - பெரு வெள்ளத்தால் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் பிரதமர் மோடி
டிசம்பர் 2016 - உடல்நலக்குறைவால் மறைந்த  ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் பிரதமர் மோடி
பிப்ரவரி - 2017 - ஈஷா யோகா மையம் சார்பில் அமைக்கப்பட்ட ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் மோடி  திறந்து வைத்தார்.
நவம்பர் 2017 - தினந்தந்தியின் பவள விழாவில் பங்கேற்க சென்னை வந்தார், பின்னர் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கு சென்று உடல்நிலை குறித்து விசாரித்தார்.
ஏப்ரல் 2018 - சென்னையில் நடைபெற்ற ராணுவ தளவாட கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது காவிரி விவகாரம் உச்சத்தில் இருந்த நிலையில் சென்னை வந்த மோடிக்கு எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆகஸ்ட் 2018 - உடல்நலக்குறைவால் காலமான திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார் 
ஜனவரி 2019 - மதுரையில் எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரை வர இருக்கிறார்.
 

source: http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu-important-editors-pick/27/1/2019/how-many-times-did-modi-visited-tamil-nadu-pm

சனி, 26 ஜனவரி, 2019

நாட்டின் 70வது குடியரசுத் தின விழா : செங்கோட்டையில் கொடி ஏற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

2019-01-26@ 10:13:13








புதுடெல்லி : நாடு முழுவதும் 70வது குடியரசுத் தின விழா கோலகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசுத் தின விழாவையடுத்து டெல்லி செங்கோட்டையில்  21 குண்டுகள் முழங்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றினார். மாநிலங்களின் தலைநகரில் அந்தந்த மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முன்னதாக குடியரசு தினத்தையொட்டி டெல்லி அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மறைந்த லான்ஸ் நாயக் நசீர் அமகது வாணிக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி மற்றும் தாயிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதை வழங்கினார். டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மூவர்ண நிறத்தில் இந்தியா கேட்டும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. ராம்நாத் கோவிந்த் கொடி ஏற்றியதை தொடர்ந்து ராஜ்பத் முதல் செங்கோட்டை வரை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்ட அணிவகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிட்டு வருகிறார். குடியரசு தின விழா அணிவகுப்பில் தேசத் தந்தை மகாத்மா காந்தி தென் ஆப்ரிக்க நாட்டில் இனப்பாகுபாடு காரணமாக ரயிலில் அவமதிக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்டவை தத்ரூபமாக இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பல்வேறு துறைகளை சேர்ந்த அலங்கார வண்டிகளும் ஊர்வலத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட இன்ஜின் இல்லாத ரயிலான, டிரெயின் - 18 மற்றும் புல்லட்ரயில்களின் மாதிரிகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெற்றன. குடியரசுத் தின விழாவையொட்டி டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெல்லி ராஜபாதை, இந்தியா கேட், அணிவகுப்பு நடக்கும் சாலைகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உயரமான கட்டடங்கள் மீது துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுத்தின விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். 

முடிவுக்கு வந்தது அமெரிக்க நிர்வாக முடக்கம்...: 15ம் தேதி காலக்கெடு நிர்ணயித்து அதிபர் டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன்: அமெரிக்காவில் 35 நாட்கள் நீடித்த நிர்வாக முடக்கம் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒப்புதலுடன் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்கி அரசு நிர்வாகம் மீண்டும் செயல்பட அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் பிப்ரவரி 15ம் தேதி வரை காலக்கெடு நிர்ணயித்து இந்த ஒப்புதலை அதிபர் அளித்துள்ளார். காலக்கெடுவுக்குள் எல்லை சுவர் எழுப்ப நிதி ஒதுக்கும் மசோதா நிறைவேறாவிட்டால் மீண்டும் நிர்வாக முடக்கம் அல்லது அவசர நிலை பிரகடணம் செய்யப்படும் என்பதில் முடிவுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேறிகளை தடுக்க மெக்சிகோ எல்லையில் பாதுகாப்பு சுவர் அமைப்பதற்கு 570 கோடி டாலர் நிதி ஒதுக்கும்படி அதிபர் டிரம்ப் நாடாளுமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டிரம்ப் கேட்ட தொகையை அளிக்க மறுத்துவிட்டனர். எனேவ மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கும் மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. இதனையடுத்து அரசின் செலவீன மசோதாக்களை நிறைவேற்ற டிரம்ப் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அமெரிக்காவில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் அரசு நிர்வாகம் உள்ளிட்ட முக்கிய அரசு துறைகள் முடங்கின. இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி தவித்து வருகிறார்கள். அரசு சேவைகளைப் பெற முடியாமல் குடிமக்களும் அவதிப்பட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டிரம்ப், நாங்கள் நல்ல உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம். அதனால், அரசு முடக்கத்தைத் திரும்பப் பெறுகிறேன். அரசாங்க ஊழியர்களுக்கு அவர்களின் ஊதியப் பணம் விரைவில் வந்துசேரும் என கூறியுள்ளார். 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468684

முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் சந்திப்பு : ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முக்கிய ஆலோசனை



சென்னை : சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திந்துள்ளார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 5வது நாளாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 13 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 8 லட்சம் பேர் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான  பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகள் கடந்த 4 நாட்களாக மூடப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணிக்கு வராததால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணிக்கு வராத சுமார் 2 லட்சம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிரான உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அரசின் அதிகாரம் என நீதிபதி கூறியுள்ளார். 

இதனிடையே ஆசிரியர்கள் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கி, வரும் 28ம் தேதி பணியமர்த்தப்படுவர் என அறிவித்துள்ளது. எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் கண்ணீர் சிந்துவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். 

மேலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது என்றும் அறிவித்துள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சந்திந்துள்ளார். ஆசிரியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், சாத்தியமுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 



source: dinakaran.com
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=468676

வெள்ளி, 25 ஜனவரி, 2019

தமிழகத்திற்கு பாஜக செய்தது என்ன? January 25, 2019


Image
தமிழகத்துக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை என்ன செய்துள்ளது?
➤2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளித்தது. 
➤2018ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 70 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். 
➤2018 டிசம்பர் மாதம், 1,264 கோடி ரூபாய் செலவில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 
➤2014ம் ஆண்டு முதல் 2018 வரை, நான்கு ஆண்டுகளில் தமிழக கிராமங்களில் 3000 கிலோ மீட்டர் வரை சாலைகள் போடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
➤2014 முதல் 2018ம் ஆண்டு வரை, வீடு இல்லாத நான்கு லட்சம் குடும்பங்களுக்கு, மத்திய அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.  
➤சாகர்மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 3 துறைமுகங்கள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
➤தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 47 ஆயிரத்துக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 

source: ns7.tv