ஞாயிறு, 6 ஜனவரி, 2019

பட்டாசு தொழிலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவிருக்கும் பசுமை பட்டாசு தயாரிப்பு! January 06, 2019

பசுமை பட்டாசுகளை தயாரிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் காரணமாக, சுமார் எட்டு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பசுமை பட்டாசுகள் தயாரிப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை, மத்திய, மாநில அரசுகள் முயலவில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவிவருகிறது. இந்த நிலையில் சேலத்தை சேர்ந்த ஆல்பா, ஒமேகா பயோ ஆராய்ச்சி மையம் சில வகையான மூலிகை தூள்களை பட்டாசு மருந்துடன் கலந்து பசுமை பட்டாசை உற்பத்தி செய்து வருகிறது.
 
கடந்த 6 மாத ஆராய்ச்சியில், கிரீன் பவுடர் கலவையை கண்டுபிடித்து, அவற்றின் தரம் குறித்து இந்திய அளவிலான ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதனுடைய முடிவுகளும் தற்போது கிடைத்துள்ளன. வழக்கமாக  பட்டாசுகளில் உள்ள வேதிப் பொருட்களுடன் பயோ கிரீன் பவுடர் குறிப்பிட்ட அளவு கலக்கும்போது அதன் நச்சுத்தன்மை பெருமளவு குறைவதாக கூறுகின்றனர்  ஆராய்ச்சியாளர்கள்.
சர்வ சாதாரணமாக கிடைக்கக்கூடிய தாவரங்களிலிருந்து மூலிகை துகள்கள் தயாரிக்கப்படுவதால், வழக்கமாக பயன்படுத்தி வந்த பட்டாசுகளிலிருந்து வெளிப்படும் கரும்புகையை காட்டிலும், பசுமை பட்டாசுகளில் நச்சுத்தன்மை பெருமளவு குறைந்து காணப்படுகிறது. இதனை உரிய ஆய்வு செய்து அரசு உறுதிப்படுத்தினால், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வு மலரும்.  பட்டாசு தொழிலில் இந்த மூலிகை  துகள்கள் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்பதையும் மறுக்க இயலாது
source : ns7.tv