ஞாயிறு, 6 ஜனவரி, 2019

வாகனத்தை மறித்த பாஜகவினரை அலறவிட்ட ஆந்திர முதல்வர்! January 05, 2019

Image

source: ns7.tv

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு் வாகனத்தை வழிமறித்து பாஜக தொண்டர்கள் ரகளை செய்தவர்கள் கைது செய்யப்பட்டனர். இங்கு வந்து தேவையில்லாத பிரச்சனைகளை ஏற்படுத்தினால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். பாஜக தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு கடும் எச்சரிக்கை.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு சிறப்பு அந்தஸ்து குறித்து கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தெலுங்கு தேசம் கட்சியினர் பிரதமர் நரேந்திர மோடி ஆந்திராவில் கால் வைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறி இருந்தனர் 
இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதா கட்சியினர்  இன்று கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வாகனத்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சந்திரபாபு திரும்பிப்போ, திரும்பிப்போ சந்திரபாபு என்று கோஷம் எழுப்பிய பாஜக தொண்டர்கள் ரகளை செய்தனர். 
இந்நிலையில் தனது வானத்திலிருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு, உங்களுக்கு என்ன வேண்டும், ஏன் போராட்டம் செய்கிறீர்கள் என்று கேட்டார். கையில் பாஜக கொடியுடன் ரகளையில் ஈடுபட்ட கட்சியினர் திரும்பிப்போ சந்திரபாபு நாயுடு என்று மீண்டும் கோஷம் எழுப்பினர். இதனால் ஆவேசமடைந்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, நீங்கள் இந்த மண்ணில் பிறந்தவர்கள் நீங்கள் மோடியின் செயலைப் பார்த்து வெட்கப்பட வேண்டும். 
இந்த மண்ணிற்கு அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் கூறத் தயாரா என்று  பாஜகவினரை பார்த்து கேள்வி எழுப்பினார். முதல்வரின் கேள்விக்கு பாஜகவை  சேர்ந்த பெண் தொண்டர் ஒருவர் பதில் கூற முற்பட்ட நிலையில் ஆவேசமடைந்த சந்திரபாபு நாயுடு இங்கு வந்து தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபடும் நீங்கள்  கடுமையாக தண்டிக்கப்படுவீர்கள் என எச்சரித்தார்.

மேலும் ஆவேசமடைந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் தொடர்ந்து வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டம் நடத்திய பாஜகவினரை காக்கிநாடா போலீஸார் கைது செய்தனர். முதல்வரின் கார் முன் திடீரென்று 50க்கு மேற்பட்ட பாஜகவினர் பாய்ந்து சென்று ரகளையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.