செவ்வாய், 8 ஜனவரி, 2019

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி! January 08, 2019

Image

source: ns7.tv

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுத்ததை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்தது. இதேபோன்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பிலும், ஓர் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. இவற்றை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர். இதுதொடர்பான, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதிக்கு தடை விதிக்கவும் நீதிபதிகள் மறுத்தனர். மேலும், இதுதொடர்பாக, வேதாந்தா நிறுவனம் பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

இதேபோன்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டவை என குறிப்பிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.