12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊராட்சி சபை கூட்டங்களை நடத்திய திமுகவிற்கு உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு பயமில்லை என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதிமுக, அமமுக, பாஜக, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி டாக்டர் சந்திரசேகர் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். கும்பகோணத்தில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், பதவிக்காகவும், வசதிக்காகவும், பிற கட்சியிகளிலிருந்து விலகி ஆளும் கட்சியில் இணைவது வழக்கம்.
ஆனால் தற்போது ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிர்கட்சியான திமுகவில் இணைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் நியாயமாகவும், இட ஒதுக்கீட்டின்படியும் நடைபெற வேண்டும் என்று தெரிவித்த மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாநகராட்சியிலும் மேயராக தேர்வு செய்யப்பட வேண்டியவர் ஆணா அல்லது பெண்ணா என்பதும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றார்.
ஆளுங்கட்சி நடத்த வேண்டிய ஊராட்சி சபை கூட்டங்களை திமுக நடத்தியதாகத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக பயப்படுவதாக அதிமுகவினர் கூறுவதை வன்மையாகக் கண்டித்தார்.
credit ns7.tv