வெள்ளி, 13 டிசம்பர், 2019

ராகுல் காந்தி விமர்சனம்...

Image
மக்களை பிளவுபடுத்தியே பிரதமர் பதவியை அடைந்தவர் நரேந்திர மோடி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஜார்கண்ட மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தலைவிரித்தாடும் நிலையிலும், அதுகுறித்து ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை எனக் கூறினார். 
மகள்களை காக்க வேண்டும் என கூறிய மோடி, பாஜக எம்.எல்.ஏ.விடம் இருந்து காக்க வேண்டும் என கூறவில்லை என விமர்சித்த ராகுல், கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக கூறினார். 
சாதி, மதம், மொழி என்ற வகையில், மக்களை பிளவுபடுத்தியே பிரதமர் பதவியை மோடி அடைந்துள்ளதாகவும், மக்களை எப்போதும் அச்சத்தில் வைத்திருக்கவே பிரதமர் விரும்புவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்தார்.  

credit ns7.tv

Related Posts: