வெள்ளி, 13 டிசம்பர், 2019

உலகின் முதல் $ 2 ட்ரில்லியன் மதிப்பு கொண்ட நிறுவனமானது Saudi Aramco!

Image
இரண்டாவது நாளாக பங்கு மதிப்புகள் உயர்ந்ததன் காரணமாக Saudi Aramco நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ட்ரில்லியன் டாலர்களை தாண்டியது. இந்த அளவை கடந்த உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையும் அது பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவின் அரசு நிறுவனமான Saudi Aramco, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
சவுதி அரேபிய பங்குச்சந்தையில் நேற்றும், இன்றும் Saudi Aramco நிறுவன பங்குகளின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்தது. அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு நேற்று 8 சதவீதமும், இன்று 10% உயர்ந்ததன் எதிரொலியாக 2 லட்சம் ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட உலகின் முதல் நிறுவனம் என்ற பெருமையை Saudi Aramco பெற்றது. இந்திய மதிப்பில் இது சுமார் 141 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச்சந்தையில் முதல் முறையாக நேற்று தான்  Tadawul stock exchange எனப்படும் சவுதி பங்குச்சந்தையில் Saudi Aramco பட்டியலிடப்பட்டது. இதுவே உலகின் அதிக வருமானம் ஈட்டும் நிறுவனமாகவும் விளங்குகிறது.
இந்நிறுவனத்தின் 1.5% பங்குகள் மட்டுமே தற்போது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இதனை வெளிநாட்டவர்களுக்கு அல்லாமல் சவுதியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாங்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக வெறும் இரண்டே நாட்களில் Saudi Aramco உயர்ந்துள்ளது. 1.19 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடன் இதுவரை ஆப்பிள் நிறுவனமே உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக விளங்கியது.
Saudi Aramcoவை ஒரு நாடாக கருதினால் அது ஜிடிபி மதிப்பில் உலகின் 8வது பெரிய நாடாக விளங்கும். 
Berkshire Hathaway, Facebook, மற்றும் Amazon நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டாலும் கூட சந்தை மதிப்பில் Saudi Aramco நிறுவனத்தின் மதிப்புக்கு அவை ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல IPO வாயிலாக கடந்த 2014ல் சீனாவை சேர்ந்த அலிபாபா குழுமம் 25 பில்லியன் அமெரிக்க டாலர்கள் திரட்டியிருந்த சாதனையையும் தற்போது Saudi Aramco முறியடித்துள்ளது. அந்நிறுவனம் 25.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது.

credit ns7.tv