செவ்வாய், 10 டிசம்பர், 2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்...!


Image
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட தினம் இந்திய அரசியல் சாசனத்திற்கு கறுப்பு தினம் என காங்கிரஸ் எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சமூகத்தை குறிவைத்தே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கண்டித்துள்ள சசி தரூர், இது அவமானகரமான மசோதா எனக் குறிப்பிட்டுள்ளார். 
வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியுரிமை சட்ட திருத்த மசோதா மிகவும் ஆபத்தான மசோதா என அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண்கோகாய் விமர்சித்துள்ளார். வங்கதேசம் அருகே தங்கள் மாநிலம் அமைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள தருண்கோகாய், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வடகிழக்கு மாநிலங்களின் மக்கள் தொகை கட்டமைப்பில் எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என்றார். 

credit ns7.tv