இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள், இந்திய அரசியலமைப்பு சாசன வரலாற்றின் கறுப்பு நாள் என, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையில் நம்பிக்கையில்லாத குறுகிய மனம் கொண்டவர்களுக்கே இந்த மசோதா நிறைவேறியது வெற்றியாக கருதப்படும் என்றும், நம் நாட்டின் அடிப்படை கொள்கைகளுக்கே இந்த மசோதா சவால் விடுவதாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
மத்திய அரசு மக்களை பிரித்தாளும் சட்டங்களை இயற்றுவதாக விமர்சித்துள்ள சோனியா காந்தி, பாஜகவின் இதுபோன்ற கொள்கைகளுக்கு எதிராக காங்கிரஸ் போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.
credit ns7.tv