credit ns7.tv
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், சென்னையில் கொரோனா பாதிப்பு இரு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதியான ராயபுரம், திருவிக நகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில், கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதாவது, வடசென்னையில் மட்டும் பாதிப்பு விகிதம், 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 98 சதவீதம் பேருக்கு நோய்க்கான எந்த அறிகுறிகளும் இல்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. நேற்று 5 மாவட்டங்களில் மட்டும் புதிய தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் நேற்று 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இந்நோய்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 906 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இது 39 சதவீதம் ஆகும். இன்று சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட 13 குழந்தைகளுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்நோயால் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 142 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் 98 சதவீதம் பேருக்கு நோய்க்கான எந்த வித அறிகுறியும் இல்லை என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.