திங்கள், 11 மே, 2020

அனைத்து மாவட்டங்களுக்கும் பரிசோதனை கிட்கள் போதுமான அளவு வழங்கப்பட்டு வருகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

credit ns7
Image
பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மருத்துவ வசதிகள் மேம்பட்டு உள்ளதால், கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் தான் மிகக் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்களுடன் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. 
கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தேவையான நிதி இருப்பதால் கொரோனா பரிசோதனைக்கு எந்த தடையும் ஏற்படவில்லை என்றார். அனைத்து மாவட்டங்களுக்கும் பரிசோதனை கிட்கள் போதுமான அளவு வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  ஏற்கனவே தேர்வு எழுதி காத்திருப்போர் பட்டியலில் இருந்த 2 ஆயிரத்து 570 செவிலியர்கள் மூன்று நாட்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள். மேலும் பேசிய அவர் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் தான், இறப்பு விகிதம், தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.